ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்
Remove ads

ஆத்திரேலியாவில் எட்டுத் தலைநகரங்கள் உள்ளன. இவை அனைத்துமே துணை தேசிய அளவிலானவை. ஆத்திரேலியக் கூட்டமைப்பின் தலைநகரமாக 1901 முதல் 1927 வரை மெல்பேர்ண் விளங்கியது. 1927இல் புதியதாக கான்பரா நகரம் உருவாக்கப்பட்ட பின்னர் அதுவே தேசியத் தலைநகரமாக உள்ளது.

ஒவ்வொரு தலைநகரத்திலும் தனது ஆள்புலத்திற்குண்டான நகர, உள்ளாட்சி சட்டவாக்க, நீதி மற்றும் நிர்வாக முறைமை செயலாக்கப்படுகின்றன. மாநில மற்றும் ஆள்புலத் தலைநகரங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மிகுந்த மக்கள்தொகை மிக்க நகரமாகவும் திகழ்கின்றன. ஆத்திரேலியாவின் கடல்கடந்த ஆள்புலமான நோர்போக் தீவிற்கு அலுவல்முறை தலைநகரமாக கிங்சுடன் உள்ளது; இருப்பினும் இது அரசு நிர்வாகத்தின் மையமாக மட்டுமே உள்ளது. நடைமுறைப்படியான தலைநகரமாக பர்ன்ட் பைன் உள்ளது.[1]

மேலதிகத் தகவல்கள் ஆட்சிப்பகுதி, தலைநகரம் ...

* கான்பரா ஆத்திரேலியாவின் தலைநகரமாக உள்ளபோதும் ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலத்தின் அலுவல்முறையான தலைநகராக கருதப்படவில்லை; ஆள்புலத்தினுள் உள்ளதோர் முதன்மை குடியிருப்பாகவும் ஆள்புலமாகவும் கருதப்படுகின்றது. ** 1911இல், தெற்கு ஆத்திரேலியா வட ஆள்புலத்தை ஆளும் பொறுப்பை ஆத்திரேலியப் பொதுநலவாய அரசிற்கு மாற்றியது. 1978இல் இதற்கு தன்னாட்சி நிலை வழங்கப்பட்டாலும் பொதுநலவாய விதிகளின்படி இது ஓர் ஆள்புலமாக, மாநிலமாக அல்ல, மட்டுமே கருதப்படுகின்றது.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads