டார்வின் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியாவின் வட ஆட்புல மாநிலத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

டார்வின் (ஆஸ்திரேலியா)
Remove ads

டார்வின் (Darwin) ஆஸ்திரேலியாவின் வட ஆள்புல மாநிலத்தின் தலைநகரம். இது ஆத்திரேலியாவின் வடக்குக் கரையில் திமோர் கடலில் அமைந்துள்ளது. 129,062 (2011) மக்கள்தொகையுடன் கூடிய இந்நகரம் அம்மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரமும், ஆத்திரேலியாவின் தலைநகர நகரங்களில் மிகச்சிறியதும் ஆகும். வெப்ப மண்டலக் காலநிலையுடன் ஈர மற்றும் உலர் பருவகாலங்களையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூடான காலநிலையைக் கொண்டிருக்கும்.[3]

விரைவான உண்மைகள்
Thumb
ஆஸ்திரேலியாவில் டார்வினின் அமைவு

பிரித்தானியர்களின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர், டார்வினின் பெரும் பகுதி லராக்கியா மக்கள் குடியிருந்தனர். 1839 செப்டம்பர் 9 இல் எச்.எம்.எஸ் பீகில் என்ற கப்பல் டார்வின் துறையைச் சென்றடைந்தது. ஜோன் விக்கம் என்பவர் அவருடைய முன்னைய கடற்பயணத்தில் தன்னுடன் பயணம் செய்த சார்லஸ் டார்வின் நினைவாக இந்நகருக்கு டார்வின் துறை (Port Darwin) எனப் பெயரிட்டார். இக்குடியேற்றத் திட்டம் 1869 ஆம் ஆண்டில் பால்மெர்ஸ்டன் (Palmerston) எனப் பெயரிடப்பட்டு, பின்னர் 1911 ஆம் ஆண்டில் மீண்டும் டார்வின் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4] இரண்டாம் உலகப்போரின் போது சப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு இலக்காகி நகரம் பெரும் சேதமடைந்து மீள உருவாக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளி டிரேசியினால் மீண்டும் நகரம் அழிக்கப்பட்டது. தற்போது ஆத்திரேலியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[5][6]

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads