ஆத்திரேலியா விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

ஆத்திரேலியா விளையாட்டரங்கம்map
Remove ads

ஆத்திரேலியா விளையாட்டரங்கம் (Stadium Australia), விளம்பர ஆதரவுக்காக ஏ.என்.செட். விளையாட்டரங்கம் (ANZ Stadium) என அழைக்கப்படும் பல-நோக்கு விளையாட்டரங்கம் ஆத்திரேலியாவின் சிட்னிநகரின் சிட்னி ஒலிம்பிக் பூங்கா என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[2] பொதுவாக "ஒலிம்பிக் விளையாட்டரங்கம்" (Olympic Stadium) என அழைக்கப்படும் இது 1999 ஆம் ஆண்டில் A$690 மில்லியன் செலவில் 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் பொருட்டு அமைக்கப்பட்டது.[1] இரக்பி, துடுப்பாட்டம், சங்கக் கால்பந்து பன்னாட்டுப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படுகின்றன.[3]

விரைவான உண்மைகள் ஏ.என்.செட். விளையாட்டரங்கம் ANZ Stadium, ஒலிம்பிக் விளையாட்டரங்கம், ஹோம்புஷ் விளையாட்டரங்கம் ...

ஆரம்பத்தில் இவ்வரங்கம் 110,000 பார்வையாளர்களைக் கொள்ளக்கூடியதாக, உலகிலேயே மிகப் பெரிய ஒலிம்பிக் அரங்கம் ஆகவும், ஆத்திரேலியாவின் மிகப் பெரிய விளையாட்டரங்கமாகவும் அமைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் இதன் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் குறுக்கப்பட்டு, நகரக்கூடிய இருக்கைகளைக் கொண்டு மீளமைக்கப்படது. இதனால் இவ்வரங்கின் இருக்கைகளின் எண்ணிக்கை நீள்சதுர அமைப்பிற்கு 83,500 ஆகவும், நீள்வட்ட அமைப்பிற்கு 82,500 ஆகவும் குறைந்தது. இது தற்போது மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கிற்கு அடுத்தபடியாக ஆத்திரேலியாவின் இரண்டாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads