2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2015 கால்பந்து ஆசியக் கிண்ணம் (2015 AFC Asian Cup) என்பது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 16வது பன்னாட்டு ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு போட்டித் தொடராகும். இப்போட்டித் தொடர் ஆத்திரேலியாவில் 2015 சனவரி 9 முதல் 31 வரை நடைபெற்றது.[1] இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி தென்கொரிய அணிக்கெதிராக விளையாடி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2015 ஆசியக்கிண்ணத்தை வென்றது. இதன் மூலம், 2017 ஆம் ஆண்டில் உருசியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் பங்குபெற்றத் தகுதி பெற்றது.
ஆத்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப்போட்டித் தொடர் இதுவாகும். அத்துடன் ஆசியா கண்டத்திற்கு வெளியே நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரும் இதுவாகும். 2015 ஆசியக் கிண்ணத்திற்கான போட்டிகள் ஆத்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேன், கான்பரா நியூகாசில் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற்றன. 16 நாடுகள் இத்தொடரில் பங்குபற்றின. போட்டிகள் நடைபெற்ற நாடு என்ற முறையில், ஆத்திரேலிய அணி இத்தொடரின் இறுதிச் சுற்றில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றது. சப்பான், தென் கொரியா ஆகியன 2011 ஆசியக் கிண்ணப் போட்டியில் இருந்து நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டன. 13 நாடுகள் 2013 பெப்ரவரி முதல் 2014 மார்ச் வரை நடைபெற்ற ஆரம்பக் கட்டப் போட்டிகளில் பங்கு பற்றி தகுதி பெற்றன.
2011 ஆசியக்கிண்ணப் போட்டியில் சப்பான் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள விளையாடியது. ஆனாலும், காலிறுதிப் போட்டியிலேயே அது தோல்வி அடைந்து வெளியேறியது.[2]

ஆசியக்கிண்ணத்திற்குத் தகுதி பெற்றவை
தகுதி பெறாதவை
Remove ads
போட்டியிடும் அணிகள்
பின்வரும் 16 அணிகள் இத்தொடரில் பங்குபற்ற தகுதி பெற்றன:
- 1 தடித்த எழுத்துகள் அவ்வாண்டில் வெற்றி பெற்ற அணியைக் குறிக்கும்.
இறுதிச் சுற்று

இறுதிச் சுற்றுக்கான அணிகளை வரிசைப்படுத்தும் தேர்வு சிட்னி ஒப்பேரா மாளிகையில் 2014 மார்ச் 26 ஆம் நாள் இடம்பெற்றது.[3] குழு நிலைப் போட்டிகளில் 16 நாடுகளும் நான்கு குழுக்களில் இடம்பெற்றன.[4] மார்ச் 2014 பிஃபா உலகத் தரவரிசையின் படி அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. தொடரை நடத்தும் ஆத்திரேலிய அணி முதல் குழுவில் ஏ1 வரிசையில் இடப்பட்டது.[5]
Remove ads
இடங்கள்
அரங்குகள்
சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேன், கான்பரா, நியூகாசில் ஆகிய நகரங்களின் ஐந்து அரங்குகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன.[6]
Remove ads
குழு நிலை
குழு ஏ
10 சனவரி 2015 | |||
தென் கொரியா ![]() | 1–0 | ![]() | கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
13 சனவரி 2015 | |||
![]() | 0-1 | ![]() | கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
![]() | 0-4 | ![]() | ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
17 சனவரி 2015 | |||
ஆத்திரேலியா ![]() | 0-1 | ![]() | பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
![]() | 1-0 | ![]() | நியூகாசில் அரங்கு, நியூகாசில் |
குழு பி
10 சனவரி 2015 | |||
![]() | 1–0 | ![]() | ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
![]() | 0–1 | ![]() | பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
14 சனவரி 2015 | |||
![]() | 1-4 | ![]() | மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() | 2-1 | ![]() | பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
18 சனவரி 2015 | |||
![]() | 3-1 | ![]() | மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() | 2-1 | ![]() | கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
குழு சி
11 சனவரி 2015 | |||
![]() | 4-1 | ![]() | கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
ஈரான் ![]() | 2-0 | ![]() | மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
15 சனவரி 2015 | |||
![]() | 1-2 | ![]() | கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
![]() | 0-1 | ![]() | ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
19 சனவரி 2015 | |||
ஈரான் ![]() | 1-0 | ![]() | பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
![]() | 1-2 | ![]() | ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி |
குழு டி
12 சனவரி 2015 | |||
சப்பான் ![]() | 4-0 | ![]() | நியூகாசில் அரங்கு, நியூகாசில் |
![]() | 0-1 | ![]() | பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
16 சனவரி 2015 | |||
![]() | 1-5 | ![]() | மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() | 0-1 | ![]() | பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன் |
20 சனவரி 2015 | |||
சப்பான் ![]() | 2-0 | ![]() | மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண் |
![]() | 2-0 | ![]() | கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா |
Remove ads
ஆட்டமிழக்கும் நிலை
இச்சுற்றுப் போட்டியில், தேவையேற்படின் கூடுதல் நேரம், மற்றும் சமன்நீக்கி மோதல் ஆகிய முறைகளில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.[7]
காலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
22 சனவரி – மெல்பேர்ண் | ||||||||||
![]() |
2 | |||||||||
26 சனவரி – சிட்னி | ||||||||||
![]() |
0 | |||||||||
![]() |
||||||||||
23 சனவரி – கான்பரா | ||||||||||
![]() |
||||||||||
![]() |
3 (6) | |||||||||
31 சனவரி – சிட்னி | ||||||||||
![]() |
3 (7) | |||||||||
ஆட்டம் 29 இன் வெற்றியாளர் | ||||||||||
22 சனவரி – பிரிஸ்பேன் | ||||||||||
ஆட்டம் 30 இன் வெற்றியாளர் | ||||||||||
![]() |
0 | |||||||||
27 சனவரி – நியூகாசில் | ||||||||||
![]() |
2 | |||||||||
![]() |
மூன்றாவது இடத்தில் | |||||||||
23 சனவரி – சிட்னி | ||||||||||
![]() |
30 சனவரி – நியூகாசில் | |||||||||
![]() |
1 (4) | |||||||||
ஆட்டம் 29 இல் தோற்றவர் | ||||||||||
![]() |
1 (5) | |||||||||
ஆட்டம் 30 இல் தோற்றவர் | ||||||||||
காலிறுதிப் போட்டிகள்
நடுவர்: ஃபகாத் அல்-மிர்தாசி (
சவூதி அரேபியா )

அரை-இறுதிப் போட்டிகள்
பார்வையாளர்கள்: 21,079
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கித்தான்)
மூன்றாம் நிலைக்கான போட்டி
ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் ஆசியக்கிண்ணத்தின் மூன்றாவது இடத்துக்காகப் போட்டியிடுவது இது இரண்டாவது தடவையாகும். இவை முறையே 1976, 1992 ஆம் ஆண்டுகளில் விளையாடின.
இறுதிப் போட்டி
தென்கொரியா தனது மூன்றாவது ஆசியக்கிண்ண வெற்றியை எதிர்நோக்கி இவ்வாட்டத்தை ஆரம்பித்தது. அதே வேளையில், ஆத்திரேலியா தனது முதலாவது ஆசியக்கிண்ன வெற்றியை எதிர்பார்த்தது. முதல் அரை ஆட்டத்தின் இறுதியில் ஆத்திரேலியா ஒரு கோலைப் போட்டு முன்னணியில் இருந்தது, ஆனாலும் ஆட்ட இறுதி நிமிடத்தில் தென்கொரியா அணி அதனை சமன் செய்ததில், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு, ஆத்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
சுற்றுப் போட்டியில் அணிகளின் தரவரிசை
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads