ஆந்திர மகாசபை

இந்திய மக்கள் அமைப்பு From Wikipedia, the free encyclopedia

ஆந்திர மகாசபை
Remove ads

ஆந்திர மகாசபை (Andhra Mahasabha) என்பது இந்தியாவின் முந்தைய ஐதராபாத்து மாநிலத்தில் இருந்த ஒரு மக்கள் அமைப்பாகும். இந்த அமைப்பு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களிடையே மக்கள் விழிப்புணர்வையும் மக்கள் இயக்கங்களையும் முன்னெடுத்தது. இறுதியில் தெலுங்கானா கிளர்ச்சியைத் தொடங்க இந்திய பொதுவுடமைக் கட்சியுடன் கைகோர்த்தது.

Thumb
1930 ஆம் ஆண்டில் இயோகிப்பேட்டையில் நடைபெற்ற முதல் ஆந்திர மகாசபையின் முதல் மாநாட்டை இந்த ஓவியம் சித்தரிக்கிறது
Remove ads

வரலாறு

1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆந்திர ஜனசங்கம் ( ஆந்திர மக்கள் சங்கம்) என்ற பெயரில் ஓர் அமைப்பு முதலில் தொடங்கப்பட்டது. ஐதராபாத்தில் நிசாமின் சமூக சீர்திருத்த மாநாட்டில் தெலுங்கில் தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோல்வியடைந்த பிறகு வெறும் 12 உறுப்பினர்களுடன் இவ்வமைப்பு தொடங்கியது. உறுப்பினர் எண்ணிக்கை விரைவாக நூற்றுக்கணக்கில் அதிகரித்தது. அமைப்பின் முதல் மாநாடு பிப்ரவரி 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோண்டா வெங்கட ரங்கா ரெட்டியின் தலைமையில் செயலாளர் மடபதி அனுமந்த ராவுடன் நடைபெற்றது.[1]

1928 ஆம் ஆண்டு, ஆந்திர மகா சபையை உருவாக்க, மடபதி அனுமந்த ராவ் முன்னிலை வகித்தார். முதல் மாநாடு 1930 ஆம் ஆண்டில் இயோகிப்பேட்டையில் சுரவரம் பிரதாபரெட்டி தலைமையில் நடைபெற்றது. [2]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads