தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
விடுதலையின் தீவிரப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951) (தெலங்காணா சயுதா போராட்டம்; தெலுங்கு: తెలంగాణ సాయుధ పోరాటం) என்பது, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 1946 ஆண்டு முதல் 1951 அக்டோபர் 21 வரை நடைபெற்ற தெலங்காணா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தைக் குறிக்கும். 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் நடத்தினர்.
Remove ads
வரலாறு

நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது. [1]
இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசு முடிவுக்கு வந்தது. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே தேசிய அரசியலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது. [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads