ஆனந்தி (நடிகை)
வெற்றி மாறன் இயக்கத்தில், தமிழ் மொழியில், 'பொறியாளன்', திரைப்படத்தில் நடித்த இந்திய நடிகை. From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்தி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2012 ஆவது ஆண்டில் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பிரபு சாலமனின் கயல் என்ற வெற்றித் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ்த் திரையுலகில் உள்ள வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.[1]
Remove ads
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
2012 | பஸ் ஸ்டாப் | சீமா | தெலுங்கு | |
2013 | பிரியத்தமா நீவசட குசலமா | பிரீத்தி | தெலுங்கு | |
2014 | கிரீன் சிக்னல் | ஜெஸ்ஸி | தெலுங்கு | |
பொறியாளன் | சாந்தி | தமிழ் | ||
கயல் | கயல்விழி | தமிழ் | ||
2015 | விசாரணை | தமிழ் | ||
சண்டி வீரன் | தமிழ் | |||
திரிஷா இல்லனா நயன்தாரா | ரம்யா | தமிழ் | ||
2016 | எனக்கு இன்னொரு பேரு இருக்கு | ஹேமா | தமிழ் | |
கடவுள் இருக்கான் குமாரு | நான்சி | தமிழ் | ||
2017 | ரூபாய் | பொன்னி | தமிழ் | |
2018 | மன்னர் வகையறா | இளையராணி[2] | தமிழ் | |
பரியேறும் பெருமாள் | ஜோதி மகாலக்ஷ்மி | தமிழ் | ||
Remove ads
சொந்த வாழ்க்கை
7 சனவரி 2021 அன்று தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கலில் சாக்ரடிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[3] தற்பொழுது அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads