ஆனந்த்ராஜ் அம்பேத்கர்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்த்ராஜ் யஷ்வந்த் அம்பேத்கர் (Anandraj Yashwant Ambedkar) (பிறப்பு 2 ஜூன் 1967) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக ஆர்வலர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் குடியரசுக் கட்சியின் சேனாவின் தலைவர் ஆவார்.[1][2] அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் ஆவார். . சசமத்துவத்திற்கான நினைவுச்சின்னம் ஒன்றை பி. ஆர். அம்பேத்கரின் பெயரால் அமைப்பதற்கான நீண்டகால கோரிக்கையை எடுத்துக்காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் 2011 இல் தாதரில் உள்ள இந்து ஆலை நிலத்தை ஆக்கிரமித்தனர்.[3][4] ஆனந்தராஜ் அம்பேத்கர் தனது அண்ணன் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதியிலும் பணிபுரிகிறார் .[5][6][7]
Remove ads
வாழ்க்கை
ஆனந்தராஜ் அம்பேத்கர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் ரமாபாய் அம்பேத்கரின் பேரன் ஆவார். இவரது தந்தையின் பெயர் யஷ்வந்த் அம்பேத்கர் (பயாசாகேப்), தாயின் பெயர் மீரா அம்பேத்கர். அவர் மனிஷா அம்பேத்கரை மணந்தார், இவருக்கு சாஹில் மற்றும் அமன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அம்பேத்கர் குடும்பம் நவாயண புத்த மதத்தைப் பின்பற்றுவர்கள் ஆவர். இவருக்கு பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் பீம்ராவ் அம்பேத்கர் என்ற இரண்டு சகோதரர்களும், ஆனந்த் டெல்டும்டேவை மணந்த ஒரு சகோதரி ரமாபாயும் உள்ளனர்.[8]
Remove ads
கல்வி
ஆனந்தராஜ் அம்பேத்கர் 10 ஆம் வகுப்பினை புனேவில் உள்ள ராஜா சிவாஜி பள்ளியில் இருந்து 1985 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார். 1987 இல், ருயா கல்லூரியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பின்னர், 1991 இல், மும்பையில் வி.ஜே.டி.ஐ நிறுவனத்திலிருந்து மின் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார்.. 1993 ஆம் ஆண்டில், பஜாஜ் நிர்வாகவியல் கல்விக்கான நிறுவனத்தில் (மும்பை) பட்டம் பெற்றார்.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads