ஆனந்த் அமிர்தராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்த் அமிர்தராஜ் (Anand Amritraj பிறப்பு 20 மார்ச் 1951) ஓர் இந்திய மேனாள் டென்னிசு வீரரும் தொழிலதிபரும் ஆவார்.[1][2][3] இவரது சகோதரர் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து 1974 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வழிநடத்தினார்,[4] 1987 இல் சுவீடனுக்கு எதிராக டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டிய விஜய் அமிர்தராஜ் தலைமையிலான இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
Remove ads
தொழில் வாழ்க்கை
ஆனந்த் அமிர்தராஜ், இவரது தம்பிகள், விஜய், அசோக் ஆகியோருடன் சர்வதேச டாப் பிளைட் போட்டிகளில் கலந்துகொண்டார். 1976 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆனந்த் மற்றும் விஜய் ஜோடி அரையிறுதியில் விளையாடினர். 1974 டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் ஆனந்த் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கைகளை எதிர்த்து இந்திய அரசாங்கம் போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்ததால் தோல்வியடந்தது.[5] 1987 இல் சுவீடனுக்கு எதிராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இவரது மகன் இசுடீபன் அம்ரித்ராஜ் ஓர் அமெரிக்க முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார், அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
டான் போஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[6]

இவரது மருமகள் அலிசன் ரிஸ்கே-அமிர்தராஜ் WTA டூரில் டாப்-50 வீராங்கனையாகவும் உள்ளார்.[7]
Remove ads
தொழில் இறுதிப் போட்டிகள்

மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads