ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும். இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகின்றது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.
ஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.
பொதுவாக இச்சுற்றுப் போட்டிகள் மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கின்றன. 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்[2]. ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன[3].
Remove ads
பரிசு பணம்
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசு பணம் சமமாக உள்ளது. 2013 போட்டியின் மொத்த பரிசு தொகை ஆஸ்திரேலிய டாலர் $ 30,000,000 ஆகும். 2013 ல் பரிசு பணத்தை பின்வருமாறு விநியோகம்:[4]
நிகழ்வுகள் | வெ | இ | அ.இ | கா.இ | 4 சு | 3 சு | 2 சு | 1 சு | த.சு 3 | த.சு 2 | த.சு 1 |
ஒற்றையர் | $2,430,000 | $1,215,000 | $500,000 | $250,000 | $125,000 | $71,000 | $45,500 | $27,600 | $13,120 | $6,560 | $3,280 |
இரட்டையர்* | $475,000 | $237,500 | $118,750 | $60,000 | - | $33,500 | $19,500 | $12,500 | - | - | - |
கலப்பு இரட்டையர்* | $135,500 | $67,500 | $33,900 | $15,500 | - | - | $7,800 | $3,800 | - | - | - |
* அணிக்கு வழங்கப்படும் தொகை
வெ = வெற்றி இ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்) அ.இ = அரையிறுதி ஆட்டம் கா.இ = காலிறுதி ஆட்டம் சு = சுற்று த.சு = தகுதிச் சுற்று |
Remove ads
வெற்றியாளர்கள்
2020 வெற்றியாளர்கள்
2019 வெற்றியாளர்கள்
2018 வெற்றியாளர்கள்
Remove ads
2017 வெற்றியாளர்கள்
2016 வெற்றியாளர்கள்
2015 வெற்றியாளர்கள்
|
2014 வெற்றியாளர்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads