ஆனந்த் குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்த் குமார் (வயது 37), பீகார் மாநிலத்தின் பாட்னாவில் "கணிதத்திற்கான ராமானுஜன் பள்ளி" என்ற பெயரில் ஒரு கல்வித்திட்டத்தை நடத்தி வரும் கணித ஆசிரியர். 2002 முதல் இவர் நடத்தி வரும் சூப்பர் 30 என்ற திட்டம் மூலம் பீகாரின் மிகவும் ஏழ்மையான, திறமையுள்ள 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இந்திய தொழில்நுட்ப நிலைய நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தி, ஒரு வருடத்திற்கான முழுச்செலவையும் ஏற்று, அதில் பெரும்பாலானவர்களை வெற்றிபெற வழிசெய்து வருகிறார்.[1] 2010- ஆம் ஆண்டு வரையில் 212 மாணவர்களை ஐ.ஐ.டீ. நுழைவுத்தேர்வில் வெற்றியடையச் செய்துள்ளார் இவர்.[2]
Remove ads
டைம் பத்திரிக்கையின் ஆசியாவில் சிறந்தவை
13 மே 2010, டைம் பத்திரிக்கை இதழில், ஆசியாவில் மனதிற்குப் பிடித்தவற்றில் சிறந்தவை என்ற பிரிவில் ஆனந்து குமாரின் சூப்பர் 30 திட்டம் சிறப்பிக்கப் பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads