பீகார்
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிகார் அல்லது பீகார் (Bihar) இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.
2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து சார்க்கண்டு மாநிலம் உருவாக்கப்பட்டது.
Remove ads
வரலாறு
பிகார் முற்காலத்தில் அதாவது பொ.ஊ.மு. 600ல் துவங்கி மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.
கல்வி
பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது. [6]
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,779 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,914 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 25,453 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,437 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 (0.24 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தியுடன், போஜ்புரி, உருது, மைதிலி மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.[7]
பொருளாதாரம்
கங்கை ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.
மாவட்டங்கள்

பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[8] மாவட்டங்கள் விவரம்;
- அரரியா மாவட்டம்
- அர்வல் மாவட்டம்
- அவுரங்காபாத் மாவட்டம்
- ககரியா மாவட்டம்
- கட்டிஹார் மாவட்டம்
- கயா மாவட்டம்
- கிசன்கஞ்சு மாவட்டம்
- கிழக்கு சம்பாரண் மாவட்டம்
- கைமுர் மாவட்டம்
- சமஸ்திபூர் மாவட்டம்
- சஹர்சா மாவட்டம்
- சிவஹர் மாவட்டம்
- சீதாமரி மாவட்டம்
- சீவான் மாவட்டம்
- சுபவுல் மாவட்டம்
- ஜகானாபாத் மாவட்டம்
- தர்பங்கா மாவட்டம்
- நவாதா மாவட்டம்
- பக்சர் மாவட்டம்
- பட்னா மாவட்டம்
- பாகல்பூர் மாவட்டம்
- பாங்கா மாவட்டம்
- பூர்ணியா மாவட்டம்
- பேகூசராய் மாவட்டம்
- போஜ்பூர் மாவட்டம்
- மதுபனி மாவட்டம்
- மதேபுரா மாவட்டம்
- முங்கேர் மாவட்டம்
- முசாபர்பூர் மாவட்டம்
- மேற்கு சம்பாரண் மாவட்டம்
- ரோத்தாஸ் மாவட்டம்
- லக்கிசராய் மாவட்டம்
- வைசாலி மாவட்டம்
- ஷேக்புரா மாவட்டம்
- ஜமூய் மாவட்டம்
- நாலந்தா மாவட்டம்
- சரண் மாவட்டம்
- கோபால்கஞ்ச் மாவட்டம்
Remove ads
ஆன்மிகத் தலங்கள்
கயை, நாலந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, மகாபோதி கோயில், கேசரியா, ராஜகிரகம் மற்றும் வைசாலி ஆகும்.
போக்குவரத்து
தொடருந்து
கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் இருப்புப்பாதைகள் அனைத்தும் பட்னா சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[9]
வானூர்தி நிலையம்
பாட்னாவில் உள்ள லோகநாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பன்னாட்டு விமான நிலையம் [10] இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.[11]
தேசிய நெடுஞ்சாலைகள்
புதுதில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2 பாட்னா வழியாக செல்கிறது.
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads