ஆன்னா நிக்கோல் இசுமித்

அமெரிக்க வடிவழகி, நடிகை, மற்றும் தொலைக்காட்சி ஆளுமை (1967–2007) From Wikipedia, the free encyclopedia

ஆன்னா நிக்கோல் இசுமித்
Remove ads

விக்கி லின் மார்ஷல் (என்கிற ஹோஹன், நவம்பர் 28,1967-பிப்ரவரி 8,2007) தொழில் ரீதியாக அன்னா நிக்கோல் இசுமித் என்று அழைக்கப்படும் இவர் ஓர் அமெரிக்க வடிவழகியும், நடிகையும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார்.[1] அன்னா இசுமித் மே 1992 இல் பிளேபாய் பத்திரிகையின் மையப் பக்கத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1993 ஆம் ஆண்டின் பிளேமேட் என்ற பட்டத்தைப் பெற்றார். பின்னர் கியூஸ், எச் அண்ட் எம், லேன் பிரையன்ட், கோனெய்ர் மற்றும் ஹீதரெட் உள்ளிட்ட ஆடை அலங்கார நிறுவனங்களுக்கு விளம்பரமாகத் தோன்றினார்.

விரைவான உண்மைகள் அன்னா நிக்கோல் இசுமித், பிறப்பு ...

இசுமித் 1984 இல் உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறி, 1985 இல் திருமணம் செய்து கொண்டார், 1993 இல் விவாகரத்து செய்தார். 1994 ஆம் ஆண்டில், 89 வயதான பில்லியனர் ஜே. ஹோவர்ட் மார்ஷலுடனான இவரது இரண்டாவது திருமணம் மார்ஷலின் பணத்திற்காக அவரைத் திருமணம் செய்து கொண்டதாக ஊகங்கள் எழுந்தன. அதை அன்னா மறுத்தார். 1995இல் மார்ஷல் இறந்ததைத் தொடர்ந்து, அன்னா அவரது நிலங்களின் மீதான தனது பங்கு குறித்து நீதிமன்றத்தை நாடினார். இவரது வழக்குகள் வரின் வழக்கு மார்ஷல் வி. மார்ஷல் , அமெரிக்க உச்ச நீதிமன்ற சட்ட அதிகாரத்தின் கேள்விக்கு உள்ளானது. குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமான மருந்துகளை எடுத்துக் கொண்டதன் விளைவாக, பிப்ரவரி 2007 இல் புளோரிடாவின் ஹாலிவுட்டில்தனது 39 வயதில் இறந்தார்.

Remove ads

தொழில் வாழ்க்கை

விக்கி ஸ்மித் என்ற பெயரில், குறைந்த அளவுடைய ஒரு உடையை அணிந்து, பிளேபாயின் 1992ஆம் ஆண்டின் மார்ச் பதிப்பின் முன்பக்கச் செய்தியில் தோன்றுவதற்கு ஹக் ஹென்ஃபரால் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிறகு இவரது தொழில் முன்னேற்றம் பெற்றது.[2] இவரின் புகைப்படங்கள் இசுடீபன் வேடா என்பவரால் உருவாக்கப்பட்டது. அன்னா இசுமித் தான் “அடுத்த மர்லின் மன்றோவாகத்” மாறத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.[3] ஸ்மித் பிளேபாய் இதழில் இடம்பெற்ற புகழ் வாய்ந்த ஒருவராக ஆனபோது செல்வாக்கு மிக்கவரானார்.[4] 1993 ஆம் ஆண்டில் பிளேமேட் ஆப் தி இயர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நேர்த்தில் தனது பெயரை அன்னா இசுமித் என மாற்றிக் கொண்டார்.[5]

Thumb
2003 இல்அன்னா இசுமித்
Remove ads

சொந்த வாழ்க்கை

மெக்ஸியாவில் உள்ள ஜிம்சின் க்ரிஸ்பி ஃப்ரைட் சிக்கன் உணவகத்தில் பணிபுரிந்து வந்த சமையல்காரரான பில்லி வெய்ன் இசுமித் என்பவரைச் சந்தித்து ஏப்ரல் 4,1985 அன்று திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 16 வயதாக இருந்தபோது அன்னாவிற்கு 17 வயது.[6] இவர்களுக்கு ஜனவரி 22,1986 அன்று டேனியல் வெய்ன் என்ற ஒரு மகன் பிறந்தார். அன்னாவும் அவரது கணவரும் அடுத்த ஆண்டு பிரிந்தனர். 1993 இல் விவாகரத்து செய்தனர்.[7] 1994ஆம் ஆண்டு ஜூன் 27 இல், 26 வயதான அன்னா இசுமித் 89 வயதான மார்ஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது மார்ஷலின் பணத்திற்காக அவரைத் திருமணம் செய்து கொண்டதாக மிகப் பெரிய வதந்தியைப் பரப்பியது.[8] இருந்தபோதும் இதை இசுமித் மறுத்தார். மார்ஷலுடனான பதின்மூன்று மாத திருமணத்திற்குப் பிறகு, 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 இல் ஹவுஸ்டனில் மார்ஷல் இறந்தார்.

Remove ads

இறப்பு

பிப்ரவரி 8,2007 அன்று, புளோரிடாவின் ஹாலிவுட்டில் உள்ள செமினோல் ஹார்ட் ராக் ஹோட்டல் & கேசினோ உள்ள தனது அறையில் அதிக போதை மருந்து உட்கொண்ட காரணத்தால் தனது 39 வயதில் இறந்தார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads