வடிவழகர்

ஒரு பொருளைக் காட்சிப்படுத்தும், விளம்பரப்படுத்தும், ஊக்குவிக்கும் ஒருவர் From Wikipedia, the free encyclopedia

வடிவழகர்
Remove ads

வடிவழகர் அல்லது மாதிரிகள் (Model) என்பது வணிகரீதியாக ஒரு பொருளை காட்சி படுத்த அல்லது அதை விளம்பரப்படுத்த உதவியாக பணியாற்றுபவரின் பாத்திரத்தை வடிவழகர் (வடிவழகி) என்று அழைக்கப்படுகின்றது. இத்துறையில் பெண்களில் பங்கு மிகமுக்கியமானது அதே தருணம் ஆண்களும் மற்றும் சிறுவர்களும் இந்த பணியை செய்கின்றார்கள்.

Thumb
ஒரு புகைப்படத்திற்கு நிற்கும் ஒரு பெண் மாதிரி

வடிவழகு செய்தல் என்பது நடிப்பு அல்லது நடனம் போன்ற பிற வகையான பொது செயல்திறன்களிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. ஒய்யாரம், கவர்ச்சி, உடற்பயிற்சி, நீச்சலுடை, கலை, உடல் பகுதி, விளம்பர மற்றும் வணிக மாதிரி போன்றவை இந்த வகைகளில் அடங்கும். ஆனால் புத்தகம், பத்திரிகை, திரைப்படம், செய்தித்தாள், இணையம் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடக வடிவங்களில் வடிவழகர் வகைகள் இடம் பெறுகின்றனர்.

இந்த மாதிரிகளை மையமாக வைத்து 2015 ஆம் ஆண்டில் சங்கர் இயக்கத்தில் என்ற திரைப்படம் வெளியானது. அதே போன்று சன் லைப் தொலைக்காட்சியில் 'சொப்பன சுந்தரி' என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.[1][2]

Remove ads

வரலாறு

ஆரம்ப ஆண்டுகளில்

14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில், ஆடைகள் மனித அளவில் தயாரிக்கப்படுவதற்கு முன்பு, மாதிரி பொம்மைகளால் (பெரும்பாலும் அரசர்களுக்கு) வாடிக்கையாளர்களுக்கு வடிவத்தில் காட்டப்பட்டது.[3]

கலைச்சார் வடிவழகர்கள்

படைப்பாற்றல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக கலைச்சார் வடிவழகர்கள் எந்தவொரு காட்சி கலைக்கும் தோரணை கொடுக்கின்றன. கலைச்சார் வடிவழகர்கள் பெரும்பாலும் மனித உருவத்தை உள்ளடக்கிய ஒரு கலைப் படைப்புக்கான உள்ளெழுச்சி வழங்கும் தொழிலர்களாவர் . உருவம் வரைதல், உருவ ஓவியம், சிற்பம் மற்றும் ஒளிப்படம் எடுத்தல் ஆகியவையில் மாதிரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலையின் மிகவும் பொதுவான வகைகள், ஆனால் எந்த ஊடகமும் பயன்படுத்தப்படலாம். பெரும்பாலும் கலாசாலைகளுக்காக அல்லது ஒரு வடிவழகரின் செலவைப் பகிர்ந்து கொள்ள கூடிவரும் அனுபவமிக்க கலைஞர்களின் முறைசாரா குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads