ஆபிரிக்க மெய்யியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, ஆபிரிக்கர்களால் உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் ஆபிரிக்க மெய்யியல் ஆகும். மிக விரிந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என்ற ஒன்று இல்லை. பல வகைப்பட்ட சிந்தனைகளை ஆபிரிக்க மெய்யியலில் உள்ளடக்குகின்றது.



Remove ads
வரலாறு
இன்று ஆப்பிரிக்கா என அறியப்படும் கண்டத்திலேயே பண்டைய எகிப்திய நாகரிகம் சிறப்புற்று இருந்தது. வட ஆபிரிக்காவில் இசுலாம் மிக விரைவாக பரவியது. எனினும் பெரும்பான்மை ஆபிரிக்கா இந்த நாகரிங்களிற்கு அப்பாலேயே வரலாற்றின் நீண்ட காலத்துக்கு இயங்கியது. பெரும்பான்மை ஆபிரிக்கா எழுத்து நுட்பத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், நுட்பங்கள் வாய்மொழி வழியாக, வழக்கங்கள் நடத்தைகள் வழியாக கற்கப்பட்டு வந்தன.
இன்று ஆப்பிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இவ்வாறு வாய்மொழியாக வழங்கிவந்த சிந்தனைகள் ஆகும். இவை முதலில் ஐரோப்பியர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் தமது மெய்யியல் முறையை வைத்து ஆபிரிக்க சிந்தனையைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள். இதனால் இன்று ஆபிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் பெரும் பகுதி ஐரோப்பிய சிந்தனை சட்டத்தின் ஊடாக, ஐரோப்பிய மொழிகளின் ஊடாக எமக்கு கிடைக்கின்ற ஆக்கங்கள் ஆகும்.[1] எ.கா Placide Tempels, Lucien Lévy-Bruhl, Marcel Griaule ஆகியோருடைய ஆக்கங்கள்.
ஆபிரிக்க மெய்யியல் பற்றிய ஆபிரிக்கர்களின் ஆக்கங்கள் முதலில் ஐரோப்பிய கல்வி பெற்ற ஆபிரிக்கர்களாலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் ஆக்கங்கள் ஐரோப்பியர்களுடன் கருத்து மோதலிலும், சமரசத்திலும் ஈடுபடுகின்றன. Kwasi Wiredu, Paulin J. Hountondji, Segun Gbadegesin, D. A. Masolo, Kwame Gyekye ஆகியோருடைய ஆக்கங்கள் இந்த நிலையைச் சார்ந்தவை.[1]
1950 களில் 1960 களில் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. எனினும் இந்த நாட்டு பலகலைக்கழகங்களில் ஆபிரிக்க மெய்யியல் துறை அக்காலத்தில் தொடங்கப்படவில்லை.[2]
Remove ads
மூலங்கள்
- மூத்தோர், கதைசொல்லிகள், சமய குருமார்கள்
- பழ மொழிகள்
- நாட்டார் கதைகள்
- அற வழக்குகள்
- சடங்குகள்
- வரலாற்று ஆவணங்கள்
- நூல்கள்
- தொல்பொருட்கள்
சிந்தனைப் பிரிவுகள்
ஆபிரிக்க மெய்யியல் என்ற ஒன்று உண்டா என்பதே ஆபிரிக்க மெய்யியலில் ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. எழுதப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், மேற்கத்தைய மெய்யியலுக்கு ஒத்த முறையியல் இல்லாத நிலையில் இக் கேள்வி எழுகின்றது. வாய்மொழி ஆதாரங்கள், ஆபிரிக்கர்களின் சிந்தனைக் களங்களும் முறைகளும், தற்கால வளர்ச்சிகள் ஆகியவை ஆபிரிக்க மெய்யியல் ஒன்று உண்டு என்று சுட்டி நிற்கின்றன.
- உபுண்டு (மெய்யியல்)
- Sage Philosophy
- Frantz Fanon
- இனத்துவமெய்யியல்
- Pan African Movement
- Négritude
சிந்தனையாளர்கள்
- Alexis Kagame
- Robert Bin Shaaban
- Wole Soyinka
- நுகுகி வா தியங்கோ
- Paulin J. Hountondji
- Kwasi Wiredu
- Henry Odera Oruka
இவற்றையும் பார்க்க
- ஆப்பிரிக்க மொழிகள்
- கறுப்புத் தோல், வெள்ளை முகம்மூடிகள்
- மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
