கசாரா மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசாரா (Hazara) மக்கள் மத்திய ஆப்கானித்தான் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் பாரசீக மொழி பேசுவர். மத்திய ஆப்கானித்தானின் பாமியான் மாகாணம், தாய்க்குந்தி மாகாணம், கோர் மாகாணத்தில் பெரும்பான்மையாகவும், கசுனி மாகாணம், ஒரூஸ்கான் மாகாணம், பர்வான் மாகாணம் மற்றும் வர்தகு மாகாணத்தில் பரவலாக வாழ்கின்றனர். ஹசாரா மக்கள் சியா இசுலாமைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் ஆப்கானித்தானின் மூன்றாவது பெரிய இனக்குழு.[6][7][8] மொத்த மக்கட்தொகையில் 9% இவர்கள்.[1][9][10] 6,50,000 ற்கும் அதிகமான கசாரா மக்கள் பாக்கித்தானில் வசிக்கின்றனர். மேலும் 10,00,000 கசாரா இன மக்கள் ஈரானில் வசிக்கின்றனர்.[2] மத்திய ஆப்கானித்தானில் வாழும் ஹசாரா மக்கள் சியா இசுலாமியப் பிரிவினராக இருப்ப்தால், தாலிபான்கள் இம்மக்களை இசுலாமியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் ஹசாரா மக்களின் வாழ்விடங்கள், பள்ளிவாசல்கள், கல்விநிலையங்கள் மற்றும் ஹசராக்களையும் தாலிபான்களால் குறி வைத்து தாக்கி அழிபடுகின்றனர்.[11]
Remove ads
பெயர்க்காரணம்
16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகலாய அரசர் பாபர் தனது சுயசரிதையான பாபர் நாமாவில் கசாராவைப் பற்றி குறிப்பிடுகிறார். மேற்கு காபூலித்தான் , வடக்கு கசானா மற்றும் தென்மேற்கு கோர் ஆகிய இடங்களைக் கசாராசாட் எனக் குறிப்பிடுகிறார்.[12] கசாரா என்பது பாரசீக மொழியிலிருந்து வந்திருக்கலாம். இம்மொழியில் இதற்கு 1000 என்று பொருள். இந்த பாரசீக மொழி மங்கோலிய மொழியில் மிங் (ming) என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம். 1000 வீரர்களைக் கொண்ட படைப் பிரிவிற்கு மிங் என்ற பெயர் செங்கிஸ் கான் காலத்தில் இருந்தது. இந்த மங்கோலிய வார்த்தை தற்போது இனக்குழுவைக் குறிப்பிடுகிறது.[13][14][15][16]
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads