ஆப்ரிகானர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆப்ரிகானர் தென்னாபிரிக்காவோடும், ஆப்ரிகான்ஸ் மொழியுடனும் தொடர்புடைய ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள், ஜெர்மானிய, இலத்தீன் மற்றும் செல்ட்டிய மரபுவழிகளைப் பெரும்பாலும் சேர்ந்த ஐரோப்பிய மூலத்தைக் கொண்டவர்களாவர்.[1][2][3]
Remove ads
தோற்றம்
ஆப்ரிக்கானர்கள், வடமேற்கு ஐரோப்பியக் குடியேற்றக்காரரின் மரபுவழியினர் ஆவர். இவர்கள், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஆட்சிசெய்த காலத்தில் (1652 – 1795)நன்னம்பிக்கை முனையில் முதன் முதலாக வந்து இறங்கினர். முதலில் வந்தவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமய அகதிகளும் வந்து, ஐரோப்பியரின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அவர்களுடைய முன்னோர்கள் முக்கியமாக, டச்சு கல்வினிஸ்ட்டுகள், பிளெமியர்கள், பிரிசியர்கள் ஆவர்.
நன்னம்பிக்கைமுனையில் தொடக்கத்தில் குடியேறிய டச்சுக்காரரின் எண்ணம், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்காக ஒரு இளைப்பாறு மையத்தை ஏற்படுத்துவதேயன்றி நிரந்தரமான ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்துவது அல்ல. எனினும், 1688 ஆம் ஆண்டில் கத்தோலிக்கரினால் இழைக்கப்பட்ட துன்பங்களில் இருந்து தப்பிய பிரெஞ்சு புரட்டஸ்தாந்த சமயத்தவர் வரவால் குடியேறியோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பிற்காலத்தில் ஐரோப்பாவின் ஸ்கன்டினேவியா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்களும் இன்றைய ஆப்ரிகானர் இனக்குழுவுள் கலந்துவிட்டனர். இவர்களைவிட, தொடக்கத்தில், ஐரோப்பியர்கள், இந்திய, மலாய மற்றும் உள்ளூர் கோயிகளுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளின் வாரிசுகளும் இந்த ஆப்ரிகானர் இனக்குழுவுள் அடங்கிவிட்டனர்.

பதிவுகளின்படி முதன் முதலாகத் தன்னை ஒரு ஆப்ரிகானர் என்று அழைத்துக்கொண்டவர் ஹெண்ட்ரிக் பியெபோவ் (Hendrik Biebouw) என்பவராவார். 1707 மார்ச் மாதத்தில் ஸ்ட்டெலென்பொச் என்னும் இடத்தின் நீதிபதி ஒருவர் விதித்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து, தான் ஆப்ரிகானர் என்றும் ஆபிரிக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது. இச் சொற் பயன்பாடு, ஒரு ஐரோப்பியர் தனது முன்னோர்களின் தாயகத்தை அல்லாமல் புதிய தென்னாபிரிக்காவைத் தனது சொந்த மண்ணாகக் கருதியதற்கான ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய போன்ற நாடுகளின் ஐரோப்பியக் குடியேற்றக்காரர் தம்மை அமெரிக்கர், கனேடியர், ஆஸ்திரேலியர் என அழைத்துக் கொண்டது போன்றது இது எனப்படுகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads