ஆப்பிரிக்க யானை

From Wikipedia, the free encyclopedia

ஆப்பிரிக்க யானை
Remove ads

ஆபிரிக்க யானை தரைவாழ் விலங்கினங்களிலேயே மிகப் பெரியதாகும். இது ஆசிய யானைகளை விட அளவில் பெரியவையாக காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் ஆப்பிரிக்க யானை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

இனங்கள்

  • தற்போது அழிவுற்றுள்ள Loxodonta adaurora, தற்போதைய ஆபிரிக்க யானைகளின் மூதாதை இனமாக கருதப்படுகிறது. ஆபிரிக்க யானைகள் இரண்டு இனங்களைக் கொண்டுள்ளன:
  • ஆப்பிரிக்கப் புதர் யானைகள் (Loxodonta africana).[1]
  • ஆபிரிக்கக் காட்டு யானைகள் (Loxodonta cyclotis).[1]
  • இவை முன்னர் Loxodonta africana என்ற இனத்தின் உப இனங்களாக கருதப்பட்டன.

ஆபிரிக்க ஆசிய யானைகளிடையான ஒப்பீடு

ஆபிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகளமும் உடையது. ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது. ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின் விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும், ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குலம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல், சிகப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads