ஆயுஷ் அமைச்சகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய அமைச்சராக சர்பானந்த சோனாவால் மற்றும் இராஜாங்க அமைச்சராக மகேந்திரா முஞ்ச்பரா உள்ளனர்.[1] இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி, சோவா-ரிக்பா மற்றும் யோகாசனம் ஆகிய கல்விகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் விளம்பரப்படுத்த இந்த அமைச்சகம் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் அமைச்சகம் மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

வரலாறு

1995ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ முறைகளுக்கான துறை நிறுவப்பட்டது. 9 நவம்பர் 2014 அன்று இந்திய மருத்துமுறைகளுக்கான துறை ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2]

நிறுவனங்கள்

இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[3]

  • தேசிய ஓமியோபதி நிறுவனம்[4]
  • தேசிய சித்தா நிறுவனம் [5]
  • தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் [6]
  • தேசிய ஆயுர்வேத நிறுவனம்
  • தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம்
  • மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
  • வடகிழக்கு தேசிய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனம்
  • வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவம்

ஒழுங்குமுறை அமைப்புகள்

இந்த அமைச்சகம் கீழ் கண்ட ஒழுங்குமுறை அமைப்புகள் கொண்டுள்ளது.

  • இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய ஆணையம்.[7]
  • மத்திய ஓமியாபதி மன்றம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads