ஆரணி சாலை தொடருந்து நிலையம்
ஆரணி ரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரணி சாலை தொடருந்து நிலையம் (Arani Road Railway Station, நிலையக் குறியீடு:ARV) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, களம்பூர் என்னுமிடத்தில் அமையப்பெற்ற ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது ஆரணியிலிருந்து 10 கி.மீ தொலைவில், ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
விழுப்புரம்- காட்பாடி தொடருந்து பாதை ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம், தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால், தொடருந்து நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூர் எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆரணி நகரத்தில் தொடருந்து நிலையம் ஏதும் இல்லை. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற நகரத்திற்கு 10 கி.மீ. தொலைவில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அந்த ரயில் நிலையத்திற்கு ஆரணி சாலை தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த தொடருந்து நிலையத்திலிருந்து ஆரணிக்குச் சுலபமாக வருவதற்க்கு வழி வகுக்கும். இந்த நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
Remove ads
போக்குவரத்து
ஆரணி சாலை தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆரணி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தொடருந்து நிலையத்திற்கு வெளியே, ஆரணி பேருந்து நிலையத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. வாடகையுந்துகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.
தொடருந்து சேவைகள்
தொடருந்து அட்டவணை
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads