ஆரணி நகராட்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரணி நகராட்சி (ஆங்கிலம்:Aarani Municipality) இந்தியாவில், தமிழ் நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தில் இந்த நகராட்சி அமைந்துள்ளது. 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சியும் உள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இரண்டாவது வருவாய் கோட்டமான வருவாய் கோட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. தற்போது புதிய பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. இந்நகராட்சியில் புகழ்பெற்ற வேம்புலியம்மன் ஆலயம் மற்றும் புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம் மற்றும் நிர்வாக வசதிக்காக 2 பேருந்து நிலையங்கள் இங்கு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி செய்யாறு ஆறு மற்றும் பாலாற்றின் துணை ஆறான கமண்டல நாகநதி ஆறு இங்கு அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் 12.67°N 79.28°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி நகராட்சி கமண்டல நாகநதியின் தெற்கே அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 முக்கிய நகரங்களில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த ஆரணி நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணிக்கு இன்னும் ஒரு பெயரும் உண்டு. அது ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர். அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆரணி 76 வது பெரிய நகரமாக அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் தொகை
2 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து மக்கள் தொகை 63,671. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 92,375. ஆறு வயதுக்கு கீழ் 6,346 பேரும் அவர்களில் 3,200 ஆண்களும் மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம் 76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில் 23,298 தொழிலாளர்களில், 153 பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள். என உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, அரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% இந்துக்கள், 7.39% முஸ்லிம்கள், 1.8% கிரிஸ்துவர், 0.01% சீக்கியர்கள், 0.01% புத்த மதத்தினர், 1.43% சமணர்கள், 0.19% ஆவர்.
Remove ads
நகராட்சி நிர்வாகம்
- ஆரணி பல்லவர்கள், மற்றும் தொண்டை நாட்டினை ஆண்ட மன்னர்கள் மற்றும் சிவாஜி, ஜாகீர் ஆகிய மன்னர்கள் ஆண்டனர்.
- ஆரணி 1921 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது.
- 1951 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- 1987 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
- 2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. ஆரணி,தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறந்த தேர்வு முதல் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. ஆரணி நகரை இந்த நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்துகிறது. ஆரணி நகராட்சியானது ஆண்டு வருமானம் 6 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டித்தருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மூலமாக அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக உள்ளது.
பட்டு மற்றும் அரிசி நகரம்
- நகரத்தில் பட்டு நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு புடவைகள், கைத்தறிகள் உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற மின் தறிகள் உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும்.
- ஆரணி சேலை (Arani sarees) என்பது இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும். இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால் ஆரணியை ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY) எனவும் அழைப்பர்.
- ஆரணி நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும்.
- இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி தயாரிக்க தஞ்சாவூருக்கு அடுத்து இரண்டாவது இந்நகரம் ஆகும்.[சான்று தேவை]
- ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்தியநாட்டில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும். இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது. இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் இராசிதான் அரிசி தரமாக இருக்கக் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.
- கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசி முக்கியப் பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசியானது தஞ்சாவூர் அரிசியை பின் தள்ளியுள்ளது.
- தற்போது தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தான் முன்னனியில் உள்ளது.அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.
Remove ads
புறநகர் பகுதி
ஆரணியின் புறநகர் பகுதிளான சத்திய விஜய நகரம், இரும்பேடு, பையூர், வடுகசாத்து, விளை சித்தேரி, தச்சூர், ராட்டிணமங்கலம், அண்ணா நகர், முள்ளிப்பட்டு, ஹவுசிங் ஃபோர்டு, சேவூர், அக்ரா பாளையம், மெய்யூர், அடையபுலம், வேலப்பாடி, ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகள் ஆரணி நகரை சார்ந்து அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து தோராயமாக 45000 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கை ஆரணி நகராட்சி எல்லைக்குள் வரும்படி சேர்க்க வேண்டும் என்பது தான். அப்படி இந்த பகுதிகளை ஆரணி நகராட்சியும் சேர்த்தால் ஆரணியானது பெருநகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ வழி வகுக்கும்.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads