ஆரியபட்டா (செயற்கைக்கோள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்.[1] இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது.[2] இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பெப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது.

- இக்கட்டுரை இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோ பற்றியது. இதே பெயருடைய வானியலாளர் பற்றி அறிய ஆரியபட்டா கட்டுரையைப் பார்க்க.
இச்செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கென சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதனை உருவாக்க 250 பொறியாளர்கள் 26 மாதங்கள் உழைத்தனர். இச்செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ.உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும். இதன் இயக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே.[3]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads