ஆரையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆரையம் அல்லது ரேடியன் (Radian) என்னும் கோண அளவு காட்டப்பட்டுளது. ஒரு வட்டத்தின் வெட்டானது (வில்) அதன் ஆரத்தின் நீளமாக இருக்குமானால், வட்டத்தின் நடுவே இந்த வெட்டு (வில்) வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் அல்லது ரேடியன் ஆகும். ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூறுவர். ஒரு வட்டத்தின் வளைவு வெட்டின் (வில்லின்) நீளம் அவ் வட்டத்தின் ஆரத்திற்கு (ஆரைக்கு) சமம் என்றால் அவ் வளைவு வெட்டானது (வில்லானது) வட்டத்தின் நடுவே வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் ஆகும். இதனைப் படத்தில் காணலாம்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஆரையம், அலகு முறைமை ...

வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் ஆரையம் அல்லது ரேடி எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது ஆகும்.

Remove ads

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads