கிரேடியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோண் அல்லது கிரேடியன் (gon , gradian) என்பது தளத்திலமையும் கோணங்களின் அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகுகளுள் ஒரு வகை. ஒரு கிரேடியனின் அளவு, ஒரு சுற்றின் அளவில் 1⁄400 பங்காகவும், ஒரு பாகையின் அளவில் 9⁄10 பங்காகவும், ஒரு ரேடியனில் π⁄200 பங்காகவும் உள்ளது.[1]
கிரேட், கிரேடு (grad, grade ) என்பன கிரேடியனுக்கான மாற்றுப் பெயர்கள். gon-என்பது கோணத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான γωνία/gōnía இலிருந்து உருவான சொல்.
ஐரோப்பிய நாடுகளில் ஒரு கிரேடின் நூற்றில் ஒரு பங்கைக் குறிப்பதற்கு செண்டிகிரேடு (centigrade), ஆயிரத்தில் ஒரு பங்கைக் குறிக்க மிரியோகிரேடு (myriograde) என்ற பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன. செண்டிகிரேடு என்பது கோணத்தின் அலகாக இருந்ததால் குழப்பம் ஏற்படாதிருக்கும் பொருட்டு, வெப்ப அலகான செண்டிகிரேடுக்கு செல்சியசு என மாற்றுப்பெயர் தரப்பட்டது.[2][3]
Remove ads
அலகுமாற்ற அட்டவணை
Remove ads
பயன்கள்
ஒவ்வொரு காற்பகுதியும் 100 கிரேடுகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
0° | = | 0 கிரேடியன்கள் |
90° | = | 100 கிரேடு |
180° | = | 200 கிரேடு |
270° | = | 300 கிரேடு |
360° | = | 400 கிரேடு |
கிரேடியனை அலகாகப் பயன்படுத்தும்போது, ஒரு கோணத்தில் அடங்கிய செங்கோணங்களை எளிதாகக் கணக்கிடலாம். ஆனால் இவ்வலகு முறையில் 30° , 60° போன்ற கோணங்களைப் பின்னங்களாகத்தான் குறிக்க முடியும்:
- 30° = 331⁄3 கிரேடு
- 60° = 662⁄3 கிரேடு)
ஒரு மணி நேரத்தில் (1⁄24 நாள்) பூமி சுழலும் கோணவளவு 15° = 162⁄3 கிரேடு.
சிக்கலெண் தளத்தில் திசைகன்களை எடுத்துக்கொள்ளும் போதும் கிரேடியன் பயனுள்ளதாக இருக்கும். சிக்கலெண் தளத்தில் உள்ள ஒரு திசையனின் கற்பனை அலகின் அடுக்கு, நேர் x-அச்சிலிருந்து அத்திசையனின் கோணத்திற்குச் (கோணவீச்சு) சமமாக ஹெக்டாகிரேடியனில் (100 கிரேடு) அமைந்திருக்கும்: : இன் கோணவீச்சு கிரேடு
Remove ads
அளக்கையியலில் பயன்பாடு
உலகின் பலபாகங்களிலும் அளக்கையியலில் (surveying) கோணத்தின் இயல்பான அலகாகக் கிரேடியன் பயன்படுத்தப்படுகிறது.[4] அளக்கையியலில்
கிரேடியனின் உட்பிரிவு அலகுகள்:
- 1 c = 0.01 கிரேடு;
- 1 cc = 0.0001 கிரேடு.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads