ஆர்க்டிக் ஓநாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்க்டிக் ஓநாய் (Arctic wolf, Canis lupus arctos) பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். இவை துருவ ஓநாய்கள் (Polar Wolf), அல்லது வெள்ளை ஓநாய்கள் (White Wolf) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.[1]
Remove ads
வாழ்க்கை முறை
ஆர்க்டிக் ஓநாய்கள் குடும்பமாக வாழும் இயல்பு உடையவை. தாய் ஓநாய்கள் ஒரு தடவைக்கு ஆறு அல்லது ஏழு குட்டிகள் வரை ஈனும். தந்தை ஓநாய் தாய் மற்றும் குட்டிகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து தரும். குளிர் அதிகமான காலங்களில் பனியில் வளை தோண்டி அதில் படுத்து உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள் ஆகும். ஆர்டிக் ஓநாய்கள் உணவின்றி பல வாரங்கள் வரை வாழும்.
காணப்படும் இடங்கள்
இவ்வகை ஓநாய்கள் கனடா, அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படுகின்றன.[2]
தோற்றம்
ஆர்க்டிக் ஓநாய்கள் அழகான சிறியமுகமும் அடர்த்தியான வாலும் கொண்டவை. அப்போது உடல் வெண்மையாகவும் வால் மட்டும் பழுப்பாகவும் இருக்கும் இச்சமயங்களில் தனது வாலைத் தூக்கிபிடித்தபடி இவை அலையும். பனியில் சறுக்காமல் நடக்க ஏதுவாக இவற்றின் பாதங்களில் மயிர் உண்டு.
உணவுப் பழக்கம்
ஆர்க்டிக் ஓநாய்கள் மீன், பறவை, பூச்சிகள், ஆர்டிக் முயல் மற்றும் பிற பாலூட்டிகளை உண்ணும். அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது இறந்த திமிங்கிலம் போன்ற விலங்குகளின் உடல்கள் கிடந்தால் அவற்றையும் உண்ணும். பல மைல் தூரத்திலிருந்தும் கூட நூற்றுக்க்கணக்கான ஓநாய்கள் கூடிவிடும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய இவை நீந்துவதில்லை. நகரும் பனிக்கட்டிகள் மீதேறி கடலில் இவை பயணம் செய்யும்.துருவக் கரடிகளின் பின்னால் சென்று, அவை தின்ற மிச்சத்தை சில ஓநாய்கள் உண்டு உயிர் வாழும். வேறு உணவு கிடைக்காத போது இவை ஒன்றையொன்று தின்பதும் உண்டு. இந்த ஓநாய்கள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களைப் பயன்படுத்தும். அவை தங்கள் இரையைத் துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads