ஆர். இராமகிருஷ்ணன்

அரசியல்வாதி, தொழிலதிபர், பரோபகாரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரங்கசாமி ராமகிருஷ்ணன் (26 மார்ச் 1946 - 7 சூலை 2019) [1] என்பவர் ஒரு இந்திய தொழிலதிபரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் ஆர். இராமகிருஷ்ணன், மாநிலங்களைவை உறுப்பினர், மாநிலங்களவை ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

இராமகிருஷ்ணன் வணிகவியலில் பட்டதாரியும், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவருமாவார். பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.[2]

இராமகிருஷ்ணன் 1965 ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும செய்தித்தாள்களில் பணிக்கு சேர்ந்தார். அங்கு இவர் அதன் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 1974-75ல் சென்னையின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்ட இவர் பின்னர் 1980 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டார். இவர் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளும்ற குழு, சீட்டு நிதிகளின் கூட்டுத் தேர்வுக் குழு போன்ற நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். இரண்டு முறை இந்திய பத்திரிகைக் கவுன்சில் மற்றும் (மாநிலங்களவை) துணைத் தலைவராகவும் இருந்தார். 1985 இல் ஐக்கிய நாடுகள் சபையின் 40 வது பொதுச் சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டதன் பெருமையையும் இவர் பெற்றார்.[3]

ஆர். ராமகிருஷ்ணன் டி. வி. எஸ். மோட்டார் கம்பனி லிமிடெட்டின் செயல்படுத்துநர் அல்லாத சுயாதீன இயக்குநராக இருந்தார். மேலும் டிவிஎஸ் நிதி மற்றும் சேவைகள் லிமிடெட்டின் இயக்குநராகவும், டிவிஎஸ் குழும நிறுவனங்களின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ராமகிருஷ்ணன் 2008 அக்டோபர் 31 முதல் 2015 திசம்பர் 25 வரை எண்ணூர் கோக் லிமிடெட் நிறுவனத்தின் கூடுதல் செயல்படுத்துநர் அல்லாத சுயாதீன இயக்குநராகவும் இருந்துள்ளார். 2005 செப்டம்பரில் நடைபெற்ற உலக காபி மாநாட்டிலும் இவர் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டார்.[4]

இவர் ராஜாஜி பொது அலுவல்கள் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார், மேலும் சர் சி. பி. ராமசாமி ஐயர் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை குதிரைப்பந்தைய சங்கத்தின் தலைவராக இருந்த இவர் சென்னை குதிரைப்பந்தைய சங்கத்தின் குழுவில் பணியாற்றினார். ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட 3230, ஆளுநராக (இந்த ரோட்டரி மாவட்டமானது தமிழ்நாட்டின் ஒசூர், சென்னை முதல் வேதாரண்யம் வரை நீண்டுள்ளது). இவர் ரோட்டரி சங்கத்தின் "Service Above Self" உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads