ஆர். என். ஜெயகோபால்
இந்திய கதையாசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். என். ஜெயகோபால் (R. N. Jayagopal, 1935 – 19 மே 2008) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் கன்னடத் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் 12,000 திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.[1]
Remove ads
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
ஆர்.என்.ஜே என்று நண்பர்களாளும், இரசிகர்களாளும் அறியப்படும் ஆர். என். ஜெயகோபால், கன்னட திரையுலகின் மற்றொரு ஜாம்பவானான ஆர். நாகேந்திர ராவுக்கு மகனாக 1935 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது துவக்க மற்றும் கல்லூரிக் கல்வியை பெங்களூரில் பயின்றார். பி. எஸ். ராஜ் ஐயங்காரிடம் கருநாடக இசை கற்றார். இவர் வயலின் வாசிப்பதில் வல்லவராவார். ஜெயகோபால் அவரது பெற்றோரின் நான்கு மகன்களில் ஒருவர். இவரது அண்ணன் ஆர். என். கிருஷ்ண பிரசாத், ஒளிப்பதிவாளராவார். இவரது தம்பி ஆர். என். சுதர்சன், ஒரு மூத்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளராவார்.
Remove ads
தொழில்
ஜெயகோபால் 1957 ஆம் ஆண்டு தனது தந்தை தயாரித்த பிரேமத புத்ரி திரைப்படத்திற்கு "திரிபுவன ஜனனி ஜகன்மோகினி" என்ற பாடல் வரிகளை எழுதி திரையுலகில் நுழைந்தார். அதுமுதல் நூற்றுக்கணக்கான படங்களுக்கு உரையாடல், பாடல் வரிகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தூமகேது, கேசரின கமலா, அவள அந்தரங்கா உள்ளிட்ட எட்டு படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னத்தின் முதல் படமான நம்ம மக்களு மற்றும் பல்லவி அனுபல்லவி ஆகிய படங்களுக்கு சிறந்த உரையாடல் எழுத்தாளராக கருநாடக அரசு விருதைப் பெற்றுள்ளார்.
இவர் பல தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார், ஆனால் கன்னடப் படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராவார். இவரது பாடல் வரிகள் பொருளுள்ளவையாகவும், மிகுந்த மதிப்பைக் கொண்டவையாகவும் இருந்தன. இவரது பல பாடல்கள் இசை அமைப்பிற்காக மட்டுமல்லாமல், பாடல்களின் தரத்தினாலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
இவர் சி. உதயசங்கர், விஜய நரசிம்மா, சரோத் அஸ்வத், ஹுன்சூர் கிருஷ்ணமூர்த்தி போன்ற சிறந்த எழுத்தாளர்களின் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
ஜெயகோபால் சென்னையில் கன்னடத்தை இரண்டாம் மொழியாக கற்பிக்கும் முதல் பள்ளியான வித்யா வினயா வினோதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியைத் துவக்கினார். நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களில் நன்கு பாராட்டப்பட்ட பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
Remove ads
திரைப்படவியல்
இயக்குநராக
நடிகராக
- மைக்கேல் மதன காமராஜன் (1990; தமிழ்)
- ஜீவநதி (1996)
விருதுகள்
கர்நாடக அரசு திரைப்பட விருதுகள்
- 1968-69 : சிறந்த உரையாடல் – நம்ம மக்களு (1969)
- 1982-83 : சிறந்த உரையாடல் - பல்லவி அனுபல்லவி (1983)
- 1985-86: சிறப்பு விருது (பாடல் வரிகள்) – ஸ்வாபிமனா (1985)
இறப்பு
இவர் 19 மே 2008 அன்று தன் 72வது வயதில் மாரடைப்பால் இறந்தார். இவரது மனைவி லலிதா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சூன் 13, 2010 அன்று இறந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads