மைசூர்
இந்திய மாநிலமான கருநாடகவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைசூர், அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கருநாடகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது மைசூர் மாவட்டத்தின் மற்றும் மைசூர் கோட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்.
Remove ads
சங்கநூல் குறிப்புகள்
எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர் நாடு 'எருமை நன்னாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)
தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)
Remove ads
இக்கால மைசூர்
மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூர் மிருகக்காட்சிசாலை ஒரு புகழ்பெற்ற விலங்குக் காட்சிச்சாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads