ஆர். ராமநாதன் செட்டியார்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராமசாமி ராமநாதன் செட்டியார் (30 செப்டம்பர் 1913 - 12 டிசம்பர் 1995) இந்திய தொழிலதிபர், அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் ராமசாமி ராமநாதன் செட்டியார், நாடாளுமன்ற உறுப்பினர், கரூர் ...
Remove ads

இளமை வாழ்க்கை

ராமநாதன் செட்டியார் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் திருவண்ணாமலை திவான் பகதூர் ராமசாமி செட்டியாருக்கு பிறந்தார். ராமசாமி செட்டியாாின் மூத்த சகோதரா் அண்ணாமலை செட்டியார் ஆவாா்.

அரசியல்

ராமநாதன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தாா். அவர் 1948 முதல் 1952 வரை சென்னை மாநகரில் ஒரு அவை உறுப்பினராக பணியாற்றினார். 1950 இல், ராமநாத செட்டியார் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டு பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் இந்திய பாராளுமன்றத்திற்கு ராமநாதன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-1967 காலகட்டங்களில் கரூர் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Remove ads

பதவிகள்

ரிசர்வ் வங்கியின் முதல் இயக்குநராக ராமநாதன் செட்டியார் இருந்தார்.[1] இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்புக் குழுவின் உறுப்பினராகவும், இந்திய கைவினை அபிவிருத்திக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இறப்பு

ராமநாத செட்டியார் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 82 வயதில் இறந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் ராமநாதன் மண்டபம் அவருக்கு பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads