கரூர்
இந்தியாவின், தமிழகத்தின், கரூர் மாவட்ட தலைமையிடமும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரூர் (Karur) இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ஆகும். கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
Remove ads
வரலாறு

2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர். கரூர், காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
கரூர், பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே, 'வஞ்சி மாநகர்' அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.
கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.
பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.
கரூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.95°N 78.08°E[1] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் உள்ளது. இந்த நகரம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 370 கி.மீ. (230 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் கரையில் கரூர் அமைந்துள்ளது. இங்கே உள்ள மண் வகைகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இவை காவிரி டெல்டாவில் பொதுவான பயிர்களுக்கு உகந்தவை.
Remove ads
அமைவிடம்
கரூரானது, தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ. தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 66 கி.மீ. தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ. தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரூரில் 2,34,506 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது, இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கரூரில் இந்துக்கள் 91.41%, முஸ்லிம்கள் 5.62%, கிறிஸ்தவர்கள் 2.88%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, 0.07% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.
Remove ads
போக்குவரத்து
கரூர், அருகில் உள்ள பெரிய நகரங்களுடன், சாலைகள் வழியாகவும், இருப்புப் பாதைகள் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது, பல நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7 மற்றும் எண். 67 கரூர் வழியாகச் செல்கின்றன. மேலும் கரூரில் இருந்து, சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் கேரளா, ஆந்திரா, கருநாடகம் போன்ற அண்டை மற்றும் பிற மாநிலங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Remove ads
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
கரூர் ஒரு மாநகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சி, 48 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, மாநகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிருவகிக்கப்படுகிறது. 338 தெருக்களை உடைய இந்த மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
கரூர் மாநகராட்சியானது, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவை சேர்ந்த வே. செந்தில்பாலாஜி வென்றார்.
Remove ads
கல்லூரிகள்
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 அரசு கல்லூரிகளும், 3 மகளிர் கல்லூரிகளும் அடங்கும்.6 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று உள்ளது.
- முக்கிய கல்வி நிறுவனங்கள்: காங்கேயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி (கரூர்) போன்றவை.
தொழில்கள் (Industries)
- நூல் மற்றும் வீட்டுத்தொழில்: கரூர் உலகிற்கு ஹோம் டெக்ஸ் (home textiles) பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாகும் – படுக்கைத் திரைகள், மேசைத் துணிகள், பருத்தி கம்பளிகள் போன்றவை.
- பஸ் உடைமை அமைப்பு தொழில்: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கரூர்தான் பெரிய பஸ்-பாடி தயாரிப்பு மையம்.
- வேளாண்மை: முக்கிய பயிர்கள்: நெல், வாழை, வெற்றிலை, நிலக்கடலை, சர்க்கரைக்கடலை.
சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் (Environment & Rivers)
- நதிகள்: அமராவதி, காவிரி, நொய்யல் ஆகிய நதிகள் கரூரின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- சுற்றுச்சூழல் சிக்கல்கள்: டை தொழில்களால் ஏற்படும் நீர் மாசு பிரச்சனைகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடலாம்.
எதிர்கால மேம்பாடுகள் (Future Developments)
- ஸ்மார்ட் சிட்டி திட்டம் (Smart City Projects) நடப்பில் இருக்கலாம்.
- புதிய சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே அப்டேட்கள்
- தொழிற் மையங்கள், ஈஎஸ்இட் (SEZ) திட்டங்கள் பற்றியும் குறிப்பிடலாம்.
ஆடிப்பெருக்கு விழா
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, அமராவதி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக அமராவதி நதித் தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அமராவதி நதித் தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.
== வானிலை மற்றும் காலநிலை ==
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads