ஆறுமுகம் கனகரத்தினம்

இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி. From Wikipedia, the free encyclopedia

ஆறுமுகம் கனகரத்தினம்
Remove ads

ஆறுமுகம் கனகரத்தினம் (Arumugam Canagaratnam (1871 – 1929)[1] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்

விரைவான உண்மைகள் ஆ. கனகரத்தினம்A. Canagaratnam, இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வட மாகாணத்தின் தெற்குத் தொகுதியின் உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

கனகரத்தினம் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1871 ஆம் ஆண்டில் பிறந்தார்.[2] இவர் வழக்கறிஞர் ஏ. கதிரவேலு, மருத்துவர் ஏ. பொன்னம்பலம் ஆகியோருடன் பிறந்தவர்.[3] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மற்றும் கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2] கல்கத்தாவில் உயர் கல்வி கற்றார்.[2],

இலங்கை அரசின் அமைச்சராக இருந்த கதிரவேலு சிற்றம்பலம் கனகரத்தினத்தின் மருமகன் ஆவார்.[4]

Remove ads

பணி

உயர் கல்வியை முடித்துக் கொண்ட கனகரத்தினம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] 1920களில் கிராமியக் கல்வி அபிவிருத்தி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[2] அத்துடன் 1921 முதல் 1926 வரை யாழ்ப்பாண மாநகரசபைத் தலைவராகவும் இருந்தார்.[2][4] 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத் தெற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2][5]

சமூகப் பணி

இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். த சிலோன் பேட்ரியட் என்ற ஆங்கிலத் தேசிய வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தினார்.[2] தனது சொந்த செலவில் யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி கல்லூரி என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை நிறுவினார். இப்பாடசாலைக்கு அதன் நிறுவனரின் நினைவாக கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் எனப் பின்னர் பெயரிடப்பட்டது.[2][4] இவரது நினைவாக யாழ்ப்பாணத்தின் சாலை ஒன்று கனகரத்தினம் வீதி என்ற பெயருடன் விளங்குகிறது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads