அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம்

'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ' இரயில் நிலையம், தமிழ்நாடு, இந்தியா. From Wikipedia, the free encyclopedia

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம்map
Remove ads

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம், (Arignar Anna Alandur metro station) சென்னையில் இருக்கும் ஆலந்தூரில் தரைக்கு மேலே மேல் மட்டத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் இரயில் நிலையமாகும். சென்னையின் மெட்ரோ இரயில் பாதை மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். ஒரு பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து அணணாசாலை வழியாக விமான நிலையம் வரையும் மற்றொரு பாதை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், கோயம்பேடு வழியாக பரங்கி மலை வரையும் செல்கின்றன. சென்னை மெட்ரோவின் நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடம் ஆகியவற்றின் ஒரு பகுதி ஆலந்தூர் மெட்ரோ நிலையமாகும். மேலும் இந்நிலையம் இவ்விரண்டு வழித்தடங்களுக்கு இடையில் ஒரு பரிமாற்ற நிலையமாகவும் செயல்படுகிறது. மெட்ரோ ரயில் செல்லும் இரண்டு பாதைகளும் சந்திக்கும் முக்கிய இடமாக ஆலந்தூர் சந்திப்பு அமைகிறது. அவ்வழித்தடங்களில் ஒன்று ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் ஆகும். மற்றொன்று சென்னை மத்திய மெட்ரோ நிலையம். சென்னை நகரின் முதலாவது பல நிலை இரயில் நிலையம் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையமாகும் [1]. இரண்டு நடைபாதைகளில் வரும் பயணிகள் தங்கள் பயணத்தின் திசையை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரே இரயில் நிலையம் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையமாகும்[2].

விரைவான உண்மைகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம்Arignar Anna Alandur metro station, பொது தகவல்கள் ...
Remove ads

இரயில் நிலையம்

Thumb
ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தின் பொதுத்தளம்
Thumb
ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தின் வெளிப்புறத் தோற்றம்
Thumb
ஆலந்தூர் மெட்ரோ நிலையம்

ஆலந்தூர் இரயில் நிலையம் சென்னை மெட்ரோவின் இரண்டு வெவ்வேறு நடைபாதைகளின் போக்குவரத்து புள்ளியாக செயல்படுவதால், இரண்டு வழித்தடங்கள் நிலையத்தில் இரண்டு வெவ்வேறு நிலைகளில் கட்டப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையிலும், மேல் மட்டத்திலும் ரயில்கள் செல்லும் வகையில் அப்பாதைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆலந்தூரிலிருந்து கிண்டி, இராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி மற்றும் சென்னை விமான நிலையம் வரை செல்லும் பயணிகள் முதலாவது நிலையில் பயணம் செய்ய வேண்டும். பரங்கிமலை, கோயம்பேடு, சிட்கோ வரை செல்லும் பயணிகள் இரண்டாவது நிலையில் பயணம் செய்ய வேண்டும்[3]. இரயில் நிலையத்திற்குள் 26.55 மீட்டர் உயரத்தில் ஓர் அடுக்கும், 35.41 மீட்டர் உயரத்தில் இரண்டாவது அடுக்குமாக இங்கு இரட்டை அடுக்கு இரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இவ்விரண்டு நிலைகளும் நகரும் படிக்கட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன [1]. பயணிகள் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பாதைகளும் உள் நுழையும் பாதைகளும் ஒரு நிலைக்கு இரண்டு வீதம் அமைக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும் முதல் நிலைக்கும் இடையில் ஓர் இடைப்பட்ட நிலை ஒன்றும் பராமரிப்பு பணிகளுக்கான நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது [1].

இந்நிலையத்தில் மொத்தம் எட்டு நகரும் படிகள் செயல்படுகின்றன. அவற்றில் நான்கு நகரும் படிகள் தரை தளத்தை நிலை ஒன்றுடன் இணைக்கின்றன. மேலும் நான்கு, நகரும் படிகள் முதல் அடுக்கை இரண்டாவது அடுக்குடன் இணைக்கின்றன. மேலும் இங்கு 18 தானியங்கி அனுமதிச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 10 அனுமதிச் சீட்டு விற்பனை பிரிவுகள் இயங்குகின்றன [1].

ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தின் தரை தளத்தில் நான்கு அணுகல் புள்ளிகளைக் கொண்டிருக்கிறது. இரண்டு முன்பக்கத்திலிருந்து நுழைவதற்கும் / வெளியேறவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் இரண்டு. அனுமதி சீட்டு விற்பனைப் பிரிவுகள் புகுமுகக்கூடத்தின் இருபுறங்களிலும் அணுகல் புள்ளிகளைக் கடந்த பின்னர் அமைந்துள்ளன. புகுமுகக்கூடத்தைக் கடந்து, பயணிகள் எட்டு நகரும் படிகள் மற்றும் நான்கு மின் தூக்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முதலாவது அடுக்கிற்குச் செல்லலாம் [2].

நிலை ஒன்று என்பது கிண்டி- இராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி -விமான நிலையப் பாதையில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய இடமாகும். இந்த மட்டத்திலிருந்து, இரண்டாம் நிலைக்கு செல்ல வழிவகுக்கும் நான்கு நகரும்படிகள் மற்றும் மின் தூக்கிகள் உள்ளன, இங்கிருந்து பயணிகள் கோயம்பேடு-சிட்கோ-பரங்கிமலை பாதையில் பயணிக்கலாம் [2].

இந்த நிலையத்தில் தனித்தனி நகரும்படிகள் மற்றும் நுழைவு வளைவுகள் உள்ளிட்ட வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன [1]. வாகனங்கள் நிறுத்துமிட வசதி இருக்கும் சில இடங்களில் இந்த ஆலந்தூர் மெட்ரோ நிலையமும் ஒன்றாகும் [4].

Remove ads

துணை மின்நிலையம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத் திட்டத்திற்காக நிலையத்திற்கு அருகில் தமிழக மின்சார வாரியத்தால் 230-கிலோ வாட்டு மின்சாரம் பெறும் துணை மின்நிலையம் கட்டப்பட்டுள்ளது. . தமிழ்நாடு மின்சார வாரியம் அருகிலுள்ள த.நா.மி.வா துணை மின்நிலையத்திலிருந்து 110 கிலோவாட்டு மின்சாரம் வழங்குகிறது. இது இரண்டு மின்மாற்றிகளால் 33 கிலோவாட்டு மற்றும் 25 கிலோவாட்டு என்ற அளவுகளில் படியிறக்கம் செய்யப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் வலையமைப்பில் இடம்பெற்றுள்ள மூன்று நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும், இது மாநிலத்தின் மின்சார கட்டத்திலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக 230-கிலோவாட்டு மின்சாரத்தைப் பெறும் துணை நிலையத்தைக் கொண்டுள்ளது, கோயம்பேடும் சென்னை சென்ட்ரலும் மற்ற இரண்டு நிலையங்களாகும் [5].

Remove ads

துணை வசதிகள்

மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள அசார் கானா சந்திப்பில் மூன்று குளிர்சாதன பேருந்து முகாம்களை அமைக்க இராணுவ பாசறை வாரியம் முடிவு செய்துள்ளது, இது ஒரு பன்னாட்டு போக்குவரத்து மையமாக மாறும். ஒவ்வொரு தங்குமிடமும் 370 சதுர அடியில் பரவுகிறது. 32 பயணிகள் அமர்ந்தும் 45 பயணிகள் நின்றபடியும் இதில் பயணம் செய்யும் வசதி உண்டு. பணம் வழங்கும் இயந்திரங்கள், பாதுகாப்புக் காவலர்கள், சிறுநீர் கழிப்பிடம், குடிநீர், தேநீர் மற்றும் காப்பி விற்பனை இயந்திரங்கள், பேருந்து வருகையை சொல்லும் அறிவிப்புப் பலகைகள் ஆகியவை தங்குமிடங்களில் இருக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் 500 மீட்டர் தொலவில் இருந்து வரும் பேருந்தை இங்கிருக்கும் தொலைக் காட்சித் திரையில் காண முடியும். இவை தவிர தகவல் தொடர்புக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மற்ற வசதிகளும் செய்யப்படுகின்றன. இவற்றை பராமரிக்க ஊழியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். தூய்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசிய புகைப்பட கருவிகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.

வணிக மையம்

சென்னை மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டமாக வணிக மையங்களாக மாற்றப்படுவதாக அடையாளம் காணப்பட்ட ஐந்து நிலையங்களில் ஆலந்தூர் நிலையம் ஒன்றாகும், கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்கட்டுத்தாங்கல் மற்றும் அசோக் நகர் போன்றவை பிற நிலையங்களாகும். சுமார் 118,000 சதுர அடியில் கார் நிறுத்துமிட அடித்தளம் மற்றும் பொய்க்கால் தளம் நிலையத்தின் பின்னால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது [6].

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads