ஆளுநர்

நடுவண் அரசின் மாநில பிரதிநிதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆளுநர் (Governor) என்றால் ஆட்சி செய்பவர் என்ற பொருள் ஆகும். ஆளுநர் என்ற சொல் gouverneur (of French language) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். பொதுவாக ஆளுநர் என்பவர் இறையாண்மைக்கு உட்படாத அரசு ஒன்றின் அதன் அரசுத்தலைவருக்குக் கீழ் செயல்படும் நிருவாக அதிகாரி ஆவார். கூட்டமைப்பு அரசொன்றில் ஆளுநர் ஒருவர் அரசினால் நியமிக்கப்படலாம் அல்லது மக்களால் அல்லது அரசு உறுப்பினர்களால் தெர்ந்தெடுக்கப்படலாம்.

Remove ads

இந்தியாவில் ஆளுநர்

இந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் இந்தியத் தலைமை ஆளுநர் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். [1]இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். [2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads