ஆவியமுக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆவியமுக்கம் அல்லது ஆவியழுத்தம் (Vapor Pressure) என்பது ஒரு நீர்மத்தின் ஆவியாகும் தன்மையைக் குறிக்கும் அளவீடு ஆகும். இது, திண்ம அல்லது நீர்ம மூலக்கூறுகள் அந்நிலையிலிருந்து தப்பிச் செல்வதற்கான போக்கைக் குறிக்கின்றது. ஒரு மூடிய கட்டகத்தில் (closed system) நீர்மத்துடன் (அல்லது திண்மத்துடன்) சமநிலையில் இருக்கும் அதன் ஆவியான வளிமத்தின் அழுத்தமே ஆவி அழுத்தம் அல்லது ஆவியமுக்கம் என்று வழங்கப் படுகிறது.[1][2][3]

எல்லாத் திண்மங்களும், நீர்மங்களும், வளிமநிலைக்கு மாறுவதற்கான குணத்தையும், எல்லா வளிமங்களும் மீண்டும் ஒடுங்கி நீர்மம் மற்றும் திண்மமாவதற்கான குணத்தையும் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், திண்ம, நீர்ம நிலைகளுடன் சமநிலையிலுள்ள வளிம நிலையினால் ஏற்படும் பகுதி அமுக்கம் ஒன்று உண்டு. இதுவே அவ்வெப்பநிலையில், அப்பதார்த்தத்தின் ஆவியமுக்கம் ஆகும். காலநிலையியலில், என்பது வளியிலுள்ள நீராவியினால் ஏற்படுத்தப்படும் பகுதி அமுக்கம் ஆகும்.

ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, அதன் ஆவி அழுத்தமும் அதிகரிக்கும். அதே போல, வெப்பநிலை குறையக் குறைய, ஆவி அழுத்தமும் குறையும்.

வளிமத்தோடு தொடர்பு கொள்ள இருக்கும் பரப்பளவு ஆவியழுத்தத்தை நிர்ணயிப்பதில்லை. அதனால் எந்த மாற்றமும் இராது. ஆனால் நீர்மத்தின் மூலக்கூறுகள் ஆவி அழுத்தத்தைத் தீர்மானிக்கின்றன. இடை-மூலக்கூறு விசை அதிகமாக இருக்கும் நீர்மத்தில் ஆவி அழுத்தம் குறைவாகவும், இடை-மூலக்கூறு விசை குறைவாக இருக்கும் ஒரு நீர்மத்தில் ஆவி அழுத்தம் அதிகமாகவும் இருப்பது இயல்பு.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads