பகுதியமுக்கம்
பகுதியழுத்தம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வளிமங்களின் ஒரு கலவையில், ஒவ்வொரு வளிமமும் கொண்டிருக்கும் பகுதியமுக்கம் அல்லது பகுதியழுத்தம் (Partial pressure) என்பது அவ்வளிமமானது கலவையின் கனவளவிலும் வெப்பநிலையிலும் தனியே இருக்குமானால், ஏற்படுத்தும் கருதுகோள் அமுக்கம் ஆகும்.[1] ஒரு கருத்தியல் வளிமக் கலவையின் மொத்த அமுக்கமானது, அக்கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.[2]
ஒரு கருத்தியல் வளிமக் கலவையினுள் X என்னும் வளிமம் உள்ளது என்க.
Remove ads
தாற்றனின் பகுதியமுக்க விதி
தாற்றனின் பகுதியமுக்க விதிப்படி, ஒன்றோடொன்று வேதித் தாக்கத்தில் ஈடுபடாத வளிமங்களைக் கொண்ட ஒரு வளிமக் கலவையின் மொத்த அமுக்கமானது, கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.[2]
X, Y, Z ஆகிய மூன்று கருத்தியல் வளிமங்களைக் கொண்ட வளிமக் கலவையைக் கருதுக.
இங்கு Ptot என்பது வளிமக் கலவையின் மொத்த அமுக்கம் ஆகும். pX, pY , pZ என்பன முறையே, X, Y, Z ஆகிய வளிமங்களின் பகுதியமுக்கங்கள் ஆகும்.
Remove ads
கருத்தியல் வளிமக் கலவைகள்
கருத்தியல் வளிமக் கலவைகளில், பகுதியமுக்கங்களின் விகிதமானது, ஒத்த மூலளவுகளின் விகிதத்திற்குச் சமனாகும். இதிலிருந்து,
ஆகவே,
இங்கு,
- = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் மூல் பின்னம்
- = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் பகுதியமுக்கம்
- = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் மூலளவு
- = வளிமக் கலவையின் மொத்த மூலளவு
- = வளிமக் கலவையின் மொத்த அமுக்கம்
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads