ஆவியுலகக் கோட்பாடு

From Wikipedia, the free encyclopedia

ஆவியுலகக் கோட்பாடு
Remove ads

ஆவியுலகக் கோட்பாடு என்பது ஆவிகளின் மேல் மனிதன் நம்பிக்கை வைத்து, அது உயிருள்ள பொருட்களின் மேலும் சடப்பொருட்களின் மேலும் ஆவி அல்லது ஆன்மா உறையும் என்ற நம்பிக்கையில் தோன்றியது. இறந்த முன்னோர்களைத் தெய்வமாக வழிபடுதல், சிறு தெய்வ வழிபாடு, இறந்தோர் கல்லறை வழிபாடு, இறந்தவருக்கு உணவு படைத்தல், மிருகங்களை வழிபடுதல், ஆவியின் எழுப்புதல் கூட்டங்கள், பொட்டு வைத்தல், பேயாட்டம், சாமியாடுதல், கிணறு வெட்டும் போது பலிகொடுத்தல், தச்சு கழித்தல், அணைக் கட்டும் போது பலி கொடுத்தல் போன்ற பல சடங்குகளும் அவை சார்ந்த நம்பிக்கைகளும் ஆவியுலகக் கோட்பாட்டிலிருந்து தோன்றியதாகும்.[1][2][3]

Thumb
அருளாடி
Remove ads

நம்பிக்கையின் காரணம்

எட்வர்கு பரனட் டைலர் 1817ல் வெளியிட்ட தொன்மைப் பண்பாடு' (Primitive Culture) என்னும் நூலில் தொன்மை சமயத்தைப் பற்றி விளக்கும் போது ஆவியுலகக் கோட்பாடு குறித்து விளக்குகிறார். ஆவியுலக கோட்பாட்டின் மையக்கருத்தை டைலர் விளக்கும் போது சமயத்தின் தொடக்கம் ஆவிகளின் பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்தே தோன்றியதென்பார்.

ஆதிகால மனிதனால், இயற்கையில் ஏற்பட்ட மின்னல், இடி, மழை, தீ, சூறாவளி, நோய்கள், ஆபத்துக்கள், விபத்துக்கள், இவற்றை எதிர்கொண்டு வெற்றிக் கொள்ள இயலவில்லை. இயற்கை சக்திகளின் செயல்பாடு அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது. இப்புதிருக்கு விடையளிக்கும் விதத்தில் அறிவியலும், தொழில் நுட்பமும், புராதான சமுதாயத்தில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. எனவே இயற்கை சக்திகள், கருவிகளில் இருக்கும ஆ்ற்றல் கனவுகள் ஏற்பட காரணம் போன்றவற்றிற்கு விடையளிக்கும் விதத்தில் அவன் உருவாக்கிய ஒரு கருத்து தான் ஆன்மா (Soul) அல்லது ஆவி (Spirit) என்பதாகும். இதன்படி ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ஆன்மா அல்லது ஆவி உறைகிறது. ஒரு மனிதன் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது ஆவி அல்லது ஆன்மா உடலைவிட்டு வெளியேறி பிற ஆவிகளைப் பார்ப்பதற்காக பறந்து செல்கிறது. அது திரும்பி வந்தவுடன் மனிதன் விழிக்கிறான். மேலும் கனவில் தோன்றும் விலங்குகள், பறவைகள், நீர் நிலைகள், போன்ற அஃறினை உயிர்களும், பாறைகள், நீர்நிலைகள், போன்ற சடப்பொருட்களிலும் கூட ஆவி அல்லது ஆன்மாவை கொண்டிருக்கின்றன என்று புராதன மனிதன் கருதினான். இவ்வாறு உயிருள்ள பொருட்களிலும் சடப்பொருட்களிலும் ஆவி அல்லது ஆன்மா உறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது தான் ஆவியுலக கோட்பாடு.

இந்த ஆவிகளும் ஆன்மாவும் மனிதர்கள் மற்றும் விலங்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றும் சுற்றியுள்ள உலகப் பொருட்களின் மீதும் இயற்கை நிகழ்ச்சிகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் ஆதிகால மனிதன் நம்பினான். இந்த ஆவியுலக கோட்பாட்டின் மூன்று முக்கிய அம்சங்களை லீச் (Leach) என்பவர் விளக்குகின்றார்.

  • இறந்த அல்லது உயிரோடிருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆவி அல்லது ஆன்மாவின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.
  • பொதீக பொருட்களின் மீது உறைகின்ற ஆவிகளின் மீது நம்பிக்கைக் கொள்ளல்.
  • இயற்கை பொருட்களின் மீது வாழும் ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

இந்த ஆவிகள் நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ இருக்கலாம். நல்ல ஆவிகளும் ஆன்மாக்களும் அவர்களுக்கு துனைபுரியும் என்றும், தீய ஆவிகளும் ஆன்மாக்களும் தீய விளைவுகளைத் தருமென்றும் நம்பினான். இவற்றின் அடிப்படையில் பல நம்பிக்கைகள் உருவாகி இன்றளவும் மக்கள் மத்தியில் உள்ளது.

கூடு விட்டு கூடு பாய்தல், புனித பொருள் வழிபாடு (Fetishism), குல மரபுக்குறி முறைகள் (Totemion) போன்றவை இவற்றிலிருந்து உருவான நம்பிக்கைகள் ஆகும். நாளாவட்டத்தில் இயற்கை சக்திகளுக்கும் பொருட்களுக்கும் மனித உருவம் அளிக்கப்பட்டது. வல்லமைமிக்க தெய்வங்கள் உருவாகின. இந்த தெய்வங்களுக்கு தெய்வீக ஆவி, புனித ஆவி (Holy Spirit) உள்ளதாக நம்பப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads