ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரதிநிதிகள் அவை (House of Representatives) என்பது ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். நாடாளுமன்றத்தின் மேலவை செனட் அவையைக் குறிக்கும். கீழவையின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பதவிக் காலம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும்.
தற்போதைய கீழவை 2013 ஆகத்து 5 இல் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் 2013 செப்டம்பர் 7 இல் இடம்பெறும். முன்னாள் கீழவை 2010 தேர்தலின் பின்னர் தெரிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இது 43வது நடுவண் நாடாளுமன்றம் ஆகும். 1940 தேர்தலுக்குப் பின்னர் இந்த நாடாளுமன்றமே தொங்கு நாடாளுமன்றமாகும். மொத்தமுள்ள 150 இருக்கைகளில் தொழிற்கட்சியும், கூட்டமைப்பும் தலா 72 இருக்கைகளைப் பெற்றன. ஆஸ்திரேலியப் பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஆடம் பாண்ட், சுயேட்சைகள் ஆண்ட்ரூ விக்கி, ரொப் ஓக்சோட், டோனி வின்ட்சர் ஆகியோரின் ஆதரவில் தொழிற்கட்சி சிறுபான்மை அரசை அமைத்தது.
Remove ads
வெளி இணைப்புகள்
- House of Representatives Committees பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம் – Parliament of Australia
- Australian Parliament – live broadcasting பரணிடப்பட்டது 2013-07-23 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads