ஆ. சிவசுப்பிரமணியன்

தமிழ் சமூகவியல் ஆய்வாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆ. சிவசுப்பிரமணியன் ( A. Sivasubramanian) தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளராவார்.[1] பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் என பன் முகங்களுடன் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல் துறைகளில் இவர் இயங்கி வருகிறார்.[2]

தொழில்

1967 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், அதேஏ ஆண்டு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியில் சேர்ந்து தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். 2001 ஏப்ரலில் ஓய்வு பெறும் வரை அதே கல்லூரியில் பணிபுரிந்தார். தமிழ் ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கிய இவர் தமிழ்ச்சமுகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தபவராக பரிணமித்தார். சமூக அறிவியல் கூட்டிணைவு அமைப்பின் ஒரு பங்களிப்பாளரும் ஆவார்.

Remove ads

பணிகள்

தென் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், வழக்காறுகள் போன்றவற்றை ஊர்வூராகத் திரிந்து சேகரித்தார். இவருடைய ஆராய்ச்சிப் பணிகள் கள ஆயவை முதன்மையாக கொண்டவையாக இருந்தன.

விருதுகள்

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது “புதுமைப்பித்தன் நினைவு” விருது எழுத்தாளர் ஆ. சிவசுப்பிரமணியனுக்கு 2018 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.[3] இவர் எழுதிய ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற நூலுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கப்பட்டது.[4]

படைப்புகள்

நூல்கள்

  • பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)
  • அடிமை முறையும் தமிழகமும் (1984)
  • வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)
  • ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)
  • மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)
  • பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990)(இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)
  • எந்தப் பாதை (2000)
  • வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)
  • கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)
  • தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)
  • தமிழகத்தில் அடிமை முறை (2005,2007 மார்ச்சு,2007நவம்பர், 2010,2012
  • நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)
  • பஞ்சமனா பஞ்சயனா (2006)
  • தோணி (2007)
  • கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)[5]
  • கோபுரத் தற்கொலைகள் (2007)
  • வரலாறும் வழக்காறும் (2008,2010)
  • ஆகஸ்ட் போராட்டம் (2008)
  • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)
  • உப்பிட்டவரை… (2009)[6]
  • இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)
  • பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)
  • படித்துப் பாருங்களேன்…. (2014)
  • பனை மரமே! பனை மரமே![7]
  • இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்
  • பிள்ளையார் அரசியல்
  • தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் களஞ்சியம் (10 தொகுதிகள்)
  • தமிழக நாட்டுப்ப்றக் கதைக் களஞ்சியம் (10 தொகுதிகள்)
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads