இக்கேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இக்கேரி (Ikkeri) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சாகராவிற்குத் தெற்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கன்னட மொழியில் இக்கேரி என்ற சொல்லுக்கு "இரண்டு வீதிகள்" என்று பொருள்.
Remove ads
இக்கேரியின் நாயக்கர்கள்



இது பொ.ச. 1560 முதல் 1640 வரை கேளடி நாயக்கர்களின் தலைநகராக இருந்தது.[1] பின்னர் பெத்தனூர் நகராவுக்கு மாற்றப்பட்டடது. பெத்தனூர் பெயரளவிலான தலைநகராக இருந்தாலும், ஆட்சியாளர்கள் இக்கேரியின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். கேளடி ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் போது கோயில்கள், கோட்டைகள் மற்றும் ஒரு அரண்மனையை இக்கேரியில் கட்டினர். அந்த நேரத்தில் இக்கேரி நாணயங்களை அச்சிடும் ஒரு தங்கச்சாலையையும் வைத்திருந்தார். மேலும், அவர்களுடைய நாணயங்கள் இக்கேரி பகோடாக்கள் என்றும் இக்கேரி பனாம்கள் என்றும் அழைக்கப்பட்டன. இருப்பினும், நாணயச் சாலை பெத்தனூருக்கு மாற்றப்பட்டது.
Remove ads
கோட்டை
இக்கேரியின் கேள நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் போது அற்புதமான கட்டமைப்புகளைக் கட்டினர். அவர்கள் காலத்தின் கட்டமைப்புகள் முக்கியமாக போசளா-திராவிட பாணியிலான கட்டிடக்கலைகளைக் காட்டுகின்றன. கட்டமைப்புகளை நிர்மாணிக்க கிரானைட் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டமைப்புகளின் சுவர்கள் மற்றும் கூரைகளில் சிக்கலான செதுக்கல்கள் அந்தக் காலத்தின் பொதுவான அம்சமாகும்.
அவர்களின் கட்டடக்கலை வலிமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அகோரேசுவரா கோயில்.[2] கற்கோயிலான கோயிலின் சன்னதிக்கு முன்னால் தரையில் கேளாடி தலைவர்களில் மூன்று பேரின் உருவங்கள் வணங்குவது போல செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் மேலே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
Remove ads
புகைப்படத் தொகுப்பு
- இக்கேரி கோயில் வரலாறு
- இக்கேரி கோயிலின் காட்சி
- நந்தி மண்டபம்
- நந்திமண்டபத்தின் மற்றொரு பார்வை
- அகோரேஷ்வர் கோயில்
- கோயிலின் பக்க காட்சி
- மற்றொரு பக்கவாட்டு வேலைப்பாடு
- இரங்க மண்டபம்
- நந்தி
- இக்கேரி கோயில் சுவரின் சிற்பம்
- கோயில் வளாகத்தில் உள்ள அகோரேசுவர் சிலையின் எச்சங்கள்
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads