இசக்கி அம்மன்

தமிழ் நாட்டார் தெய்வம் From Wikipedia, the free encyclopedia

இசக்கி அம்மன்
Remove ads

இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். இந்த தெய்வத்தை பழையனூர் நீலியின் வடிவம் என்ற கருத்து உள்ளது.[2] குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரச்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனை தீரும் என்பதும் நம்பிக்கையாகும்.[சான்று தேவை] இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் பிரதானமாக இவருடைய சன்னதி அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம் இருந்தது, இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் இசக்கியம்மன் வழிபாடு காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் இசக்கியம்மன், அதிபதி ...
Thumb
தமிழ்நாட்டின் செங்கோட்டை அருகே உள்ள ஒரு சிறிய கோயிலின் வாயிலில் இசக்கியம்மன் சித்தரிக்கப்பட்டுள்ளார்
Remove ads

சொல்லிலக்கணம்

இசக்கியம்மன் - இசக்கி + அம்மன். இசக்கி என்ற சொல்லானது இயக்கி என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். இயக்கி என்ற பொதுமைப் பெயரை உடைய பலருள் இவரும் ஒருவர். இவரைப்போல எண்ணற்ற இயக்கிகள் உள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாறான இயக்கிகளில் சிலர் மட்டுமே வழிபடப்படுகிறார்கள். பொதுவாக குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்க கூடிய வடிவம் மற்றும் கைகளில் குழந்தை இல்லாத வடிவம் என இரு வடிவங்களில் வழிபடப்படுகிறார். அவர்களில் இயக்கியம்மன் மட்டுமே வழிபடப்படுகிறார். இயக்குபவள் என்ற அர்த்ததில் பல பெண் எட்சிகளை அழைக்கின்றனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்கள் பலரின் காவல் தெய்வங்களாக இந்த இயக்கிகளில் சிலர் இருந்துள்ளார்கள்.

Remove ads

வடிவம்

இயக்கியம்மன் சிவப்பு சீலை அணிந்தும், இடது கையில் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்தவாறும், வலது கையை ஓங்கியபடி சூலத்தையோ, கத்தியை ஏந்தியவாறும் உள்ளார். சில இடங்களில் சிவப்பு சீலையின்றி வெறும் கச்சையுடன் இருக்கும் சிலைகளும், கையில் குழந்தையின்றி இருக்கும் சிலைகளும் உள்ளன.

இசக்கியம்மன் வழிபாடு

இசக்கியம்மனை அவர் இருக்கும் இருப்பிடத்தின் பெயரோடு அழைக்கின்றனர். சமண சமயத்தவர்களின் இசக்கிகள் வழிபாட்டிலிருந்து இந்த இசக்கயம்மன் வழிபாடு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இசக்கியம்மன் அனைத்து சாதிச் சமூகங்களில் குலத் தெய்வமாக உள்ளார் குறிப்பாக சுடலைமாடசாமி கோவில்களில் இடம் பெற்றிருக்கிறார்

நேர்த்திக் கடன்கள்

தொட்டில் பிள்ளை, சீலைப் பிள்ளை

கோயில்கள்

  • குத்துப்பிறை இசக்கியம்மன் கோயில், மருகால் குறிச்சி, நான்குநேரி வட்டம்.
  • பந்திவிளை இசக்கி அம்மன் கோவில், புதுக்கடை (P.O), கன்னியாகுமரி.
  • தாழையடித்தட்டு இசக்கி அம்மன் திருக்கோவில், கட்டிமாங்கோடு (P.O), கன்னியாகுமரி.
  • அஞ்சுகண்ணுகலுங்கு அருள்மிகு மாடன் தம்புரான் இசக்கி அம்மன் ஆலயம், புதுக்கடை, கன்னியாகுமரி.
  • வாலத்து இசக்கி அம்மன் கோவில், வண்டி குடியிருப்பு, கன்னியாகுமரி.
  • ஈயான்குலம் இசக்கியம்மன் கோயில்
  • மலையன்குளம் இசக்கியம்மன் கோவில்.
  • கல்லுப்பாலம் கல்பாலத்தடி இசக்கியம்மன் கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.
  • களியக்கல் இசக்கியம்மன் கோயில்.
  • சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில், நெல்லை.[3]
  • குறவன்மடம் இசக்கியம்மன் கோயில், திருச்செந்தூர்.[4]
  • கன்னியாகுமரி இசக்கியம்மன் கோயில்
  • ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், கன்னியாகுமரி.
  • கள்ளிக்குப்பம் இசக்கியம்மன் கோயில், அம்பத்தூர், சென்னை. [5]
  • மேக்கோடு இசக்கியம்மன் கோயில்.
  • பனவிளை அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், வெட்டுவெந்நி, மாா்த்தாண்டம்.
  • உரப்பனவிளைசரல் அருள்மிகு தேவி ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில்.
  • கடங்கநேரி அருள்மிகு பூ இசக்கியம்மன்.
  • ஆல்தரை இசக்கியம்மன் பறக்கை, செட்டிதெரு. கன்னியாகுமரி.
  • வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன், பெருமாள்புரம், கன்னியாகுமரி.
  • ஊற்றான்ஞ்சாணி இசக்கி அம்மன் கோவில், சாரூர், திருவட்டாறு.
  • ஒத்த பனை இசக்கி அம்மன் கோவில், பொற்றையடி.
  • சாலை இசக்கிஅம்மன், திருநெல்வேலி town - குறுக்குத்துறை சாலை
  • இராமன்பறம்பு இசக்கிஅம்மன் கோவில், தக்கலை.
  • சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில், சாஸ்தாவிநல்லூர் கிராமம், தூத்துக்குடி.
  • உடையாம்புளி இசக்கியம்மன் கோயில்.
  • சாலை இசக்கிஅம்மன், திருநெல்வேலி நகரம் - குறுக்குத்துறைச் சாலை.
  • ஸ்ரீ பாட்டாங்கரை இசக்கி என்ற தில்லைமாகாளி அம்மன் திருக்கோவில், இளையநயினார்குளம்.
Remove ads

நூல்கள்

  • வயல்காட்டு இசக்கி - அ. க. பெருமாள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads