இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
இசுகந்தர் புத்திரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Iskandar Puteri; ஆங்கிலம்: Iskandar Puteri City Council); (சுருக்கம்: MBIP) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் இசுகந்தர் புத்திரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.[1]
இசுகந்தர் புத்திரி மாநகராட்சியின் அதிகார வரம்பு 104.7 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி, ஜொகூரில் உள்ள ஜொகூர் பாரு மாவட்டத்தின் (Johor Bahru District) ஒரு பகுதியை நிர்வகிக்கிறது. ஜொகூர் பாரு மாவட்டத்தில் தான் இசுகந்தர் புத்திரி மாநகரமும் உள்ளது.
Remove ads
பொது
2017 நவம்பர் 22-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு இசுகந்தர் புத்திரி மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலையகம், இசுகந்தர் புத்திரி மாநகரத்தில் மேதினி எனும் இடத்தில் உள்ளது.
இந்த மாநகராட்சியும் பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[2]
Remove ads
நிர்வகிக்கும் இடங்கள்
- இசுகந்தர் புத்திரி - Iskandar Puteri
- சுகூடாய் - Skudai
- கெலாங் பாத்தா - Gelang Patah
- கங்கார் பூலாய் - Kangkar Pulai
- தஞ்சோங் குப்பாங் - Tanjung Kupang
- தஞ்சோங் பெலப்பாஸ் - Tanjung Pelepas
கிளை அலுவலகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads