இசுட்ரோன்சியம் சல்பைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுட்ரோன்சியம் சல்பைடு (Strontium sulphide) என்பது SrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம், இசுட்ரோன்சியத்தின் முக்கியத் தாதுப் பொருளான செலசுடைட் தயாரிக்கும் போது இடைநிலைப் பொருளாகத் தோன்றுகிறது. செலசுடைட் தாது உபயோகமுள்ள பல சேர்மங்களைத் தயாரிக்க உதவுகிறது[2].
Remove ads
தயாரிப்பு மற்றும் வினைகள்
இசுட்ரோன்சியம் சல்பேட்டை 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக இசுட்ரோன்சியம் சல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- SrSO4 + 2 C → SrS + 2 CO2
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 டன்[2] இசுட்ரோன்சியம் சல்பைடு இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. ஒளிரும் சல்பைடு மற்றும் ஒளிரா சல்பைடு என்ற இரண்டு நிலை சல்பைடுகளும் அறியப்படுகின்றன. மாசுக்கள், குறைபாடுகள் மற்றும் கலக்கப்படும் பொருட்கள் முதலியன் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன[3]
காரமண் உலோகமான இத்தனிமத்தின் சல்பைடு உப்பு நீருடன் விரைவாகச் சேர்ந்து நீராற்பகுப்பு அடைகிறது.
- SrS + 2 H2O → Sr(OH)2 + H2S
இக்காரணத்தினால், இசுட்ரோன்சியம் சல்பைடு உப்பு மாதிரிகள் அழுகிய முட்டையின் மணம் கொண்டுள்ளன. இதே தயாரிப்பு முறையில் இசுட்ரோன்சியத்தின் வணிகமுக்கியத்துவம் கொண்ட உப்பான இசுட்ரோன்சியம் கார்பனேட்டும் மற்றும் பல உப்புகளும் தயாரிக்கப்படுகின்றனref name=Ullmann/>
- SrS + H2O + CO2 → SrCO3 + H2S
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உப்பும் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads