மக்னீசியம் சல்பைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்னீசியம் சல்பைடு (Magnesium sulfide) என்பது MgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தூய்மையான மக்னீசியம் சல்பைடு வெண்மை நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இச்சேர்மம் தூய்மையற்ற நிலையில் கிடைக்கிறது. தூய்மையற்ற மக்னீசியம் சல்பைடு பழுப்பு நிறமாகவும் படிக வடிவமற்றும் காணப்படுகிறது. தொழிற்சாலைகளில் உலோக இரும்பு உற்பத்தி செய்யப்படுகையில் இச்சேர்மம் உருவாக்கப்படுகிறது.
Remove ads
தயாரிப்பு மற்றும் பண்புகள்
கந்தகம் அல்லது ஐதரசன் சல்பைடை மக்னீசியத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் மக்னீசியம் சல்பைடைத் தயாரிக்கலாம். அதிக நிலைப்புத்தன்மை கொண்ட மக்னீசியம் சல்பைடு பாறை உப்பு வடிவமைப்பில் படிகமாகிறது. துத்தநாக பிளெண்ட் எனப்படும் துத்தநாகக் கந்தக அமைப்பு[1] மற்றும் உவுர்ட்சைட் [2] படிக அமைப்பில் படிகமாகின்ற மக்னீசியம் சல்பைடை புறமூலக்கூற்று கற்றை படிகப்படலம் வழிமுறையில் தயாரிக்க முடியும்.
மக்னீசியம் சல்பைடின் வேதிப்பண்புகள் இதனையொத்த சோடியம் சல்பைடு, பேரியம் சல்பைடு அல்லது கால்சியம் சல்பைடு போன்ற அயனிச் சேர்மங்களின் வேதிப்பண்புகளுடன் ஒத்திருக்கிறது. ஆக்சிசனுடன் மக்னீசியம் சல்பைடு வினைபுரிந்து இணையான சல்பேட்டு சேர்மமான மக்னீசியம் சல்பேட்டு உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடையும் மக்னீசியம் ஐதராக்சைடு|மக்னீசியம் ஐதராக்சைடையும்]] கொடுக்கிறது. [3]
Remove ads
பயன்கள்
அடிப்படை ஆக்சிசன் எஃகு உருவாக்கச் செயல்முறையில் முதலில் நீக்கப்பட வேண்டிய தனிமம் கந்தகமாகும். ஊது உலையில் கிடைக்கும் அசுத்தமான இரும்பில் உள்ள கந்தகத்தை நீக்குவதற்கு பலநூறு கிலோ அளவில் மக்னீசியம் பொடி சேர்க்கப்படுகிறது. மக்னீசியம் சல்பைடு உருவாகி உருகிய இரும்பின் மேல் மிதக்கிறது. பின்னர் இவ்விரும்பில் இருந்து நீக்கப்படுகிறது [4]
MgS சேர்மத்தின் அகன்ற பட்டை இடைவெளி நேரடியான குறைக்கடத்தியாக நீலப்பச்சை உடனொளிர்வைத் தருகிறது[5]. 1900 ஆம் ஆண்டுகளில் இருந்து அறியப்பட்டுள்ள இப்பண்பு குறைந்த அலைநீளம் கொண்ட புறஊதா ஒளி உணரியாகப் பயன்படுகிறது.[6]
Remove ads
தோற்றம்
சில வேதிக் கசடுகளில் பகுதிப்பொருளாக இருப்பதையும் தவிர்த்து MgS ஓர் அரிதான நினின்கெரைட்டு என்ற புவிசாரா கனிமமாக விண்வீழ் கற்களில் காணப்படுகிறது. C/O > 1 அளவிலான சில கார்பன் விண்மீன் வகைகளின் விண்மீன் சூழ் உறைகளிலும் MgS காணப்படுகிறது.[7]
பாதுகாப்பு
MgS சேர்மத்தின் மீது ஈரம்பட நேர்ந்தாலேயே ஐதரசன் சல்பைடை வெளிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads