இசுரேலியப் பாதுகாப்புப் படைகள்

From Wikipedia, the free encyclopedia

இசுரேலியப் பாதுகாப்புப் படைகள்
Remove ads

இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்; எபிரேயம்: צְבָא הַהֲגָנָה לְיִשְׂרָאֵל Tzva Hahagana LeYisra'el, அர்த்தம். "இசுரேலுக்கான பாதுகாப்பு படை"; அரபி: جيش الدفاع الإسرائيلي, Jaish Al-Difaa Al-Isra'ili; (ஆங்கில மொழியில்)), இசுரேலில் பொதுவாக எபிரேய மொழியில் அறியப்படும் சாகல் (צה"ל), என்பன இசுரேலிய அரசாங்கத்தின் படைகளாகும். அவை இசுரேலிய இராணுவம், இசுரேலிய விமானப்படை, இசுரேலியக் கடற்படை என்பவற்றைக் கொண்டுள்ளன. இது இசுரேலியப் பாதுகாப்பு படையினரின் அடிப்படையானதும், இசுரேலுக்குள் பொதுத்துறை சார் ஆட்சி எல்லை அற்றதுமாகும். இவை இசுரேல் பாதுகாப்பு அமைச்சரின் கீழ் இயங்கும் முப்படைத் தளபதியைத் தலைமையாகக் கொண்டுள்ளன.

விரைவான உண்மைகள் இசுரேலியப் பாதுகாப்புப் படைகள், நிறுவப்பட்டது ...

1948 மே 26 அன்று பாதுகாப்பு அமைச்சர் டேவிட் பென்-குரியனின் உத்தரவின்படி, ஹகானா துணை இராணுவப் படை குழுவிலிருந்து படைக்கு கட்டாய ஆள்சேர்க்கும் இராணுவமாகப் போராளிக் குழுக்களான இர்குன், லெகி என்பவற்றை உள்வாங்கி உத்தியோகபூர்வமாக இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டன. இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் எல்லா நாடுகளிலுமுள்ள இராணுவம் போன்று முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட இசுரேலிய ஆயுதப் படைகளாகச் சேவையாற்றியுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைகளாக இவற்றைக் கொள்ளலாம்: இசுரேலிய விடுதலைப் போர் (1948–1949), பழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள் (1950s–1960s), சூயெசு நெருக்கடி (1956), ஆறு நாள் போர் (1967), தேய்வழிவுப் போர் (1967–1970), யோம் கிப்பூர்ப் போர் (1973), 1978 தென் லெபனான் போர் (1978), முதலாவது லெபனான் போர் (1982), தென் லெபனான் போர் (1982–2000) (1982–2000), முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம் (1987–1993), இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் (2000–2005), இரண்டாவது லெபனான் போர் (2006), காசா போர் (2008–2009) மற்றும் பிற போர்கள். குறுகிய காலத்தில் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் ஈடுபட்ட போர்களின் எண்ணிக்கை, எல்லை முரண்பாடுகள் என்பன அவற்றை உலகிலுள்ள அதிக சமர் பயிற்சி (அனுபவம்) பெற்ற இராணுவங்களில் ஒன்றாக்கியுள்ளது.[7][8] அதேவேளை அவை மூன்று முன்நிலைகளில் இயங்குகின. அவை முறையே, வடக்கில் லெபனானுக்கும் சிரியாவுக்கு எதிராகவும், கிழக்கில் யோர்தானுக்கும் ஈராக்கிற்கும் எதிராகவும், தெற்கில் எகிப்துக்கு எதிராகவும் ஆகும். 1979 எகிப்து-இசுரேல் சமாதான ஒப்பந்தத்தின் பின், அவை கவனத்தை தென் லெபனான் மற்றும் பாலஸ்தீன நிலப்பகுதி திருப்பியுள்ளன.

இசுரேலிய பாதுகாப்புப் படைகள் பல வழிகளிலும் உலகிலுள்ள பல ஏனைய ஆயுதப் படைகளிலிருந்து வேறுபடுகின்றன. இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை என்பனவற்றினிடையே நெருக்கமான தொடர்பைப் பேணுவதிலிருந்து, அவற்றின் கட்டமைப்புக்குள் பெண்களை கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்குள் உள்வாங்குதல் ஆகியன வேறுபாடுகளாகும். இவை ஆரம்பித்ததிலிருந்து இசுரேலின் தனித்துவ பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இசுரேலிய சமூகத்தில் மிக முக்கியமானவற்றில் நிறுவனங்களில் ஒன்றான இசுரேலிய பாதுகாப்புப் படைகள், அந்நாட்டின் பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் தாக்கம் செலுத்துகின்றன. 1965 இல் கல்விக்கு பங்களித்ததற்காக இசுரேலிய பாதுகாப்புப் படைகள் இசுரேலிய பரிசு விருதைப் பெற்றன.[9] இசுரேலின் அபிவிருத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள் சிலவற்றை இவை பாவிக்கின்றன. அவற்றில் பல குறிப்பாக இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தேவைக்கேற்பவே பொருத்தமாகின்றன. மேர்கவா கவசவாகனம், உயர் தொழில் நுட்ப ஆயுத முறைகள், இரும்புக் குவிமாடம், ரோபி எதிர்ச்செயற்பாடு, கலில் மற்றும் டவோர் தாக்குதல் சுடுகலன் ஆகிய இவற்றில் குறிப்பிடத்தக்கன. இசுரேலிய கண்டுபிடிப்பான சுடுகலன் உசி 1954 முதல் 2003 வரை இசுரேலிய பாதுகாப்புப் படைகளால் பாவிக்கப்பட்டது. 1967 இல் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் நெருக்கமாக இராணுவ உறவைக் கொண்டுள்ளன.[10] அத்துடன் அபிவிருத்தி உடன்பாட்டையும் கொண்டுள்ளன. இவற்றில் எப்-15ஐ சண்டை விமானம், THEL சீரொளி பாதுகாப்பு முறை, ஈட்டி ஏவுகணை பாதுகாப்பு முறை ஆகியனவும் அடங்கும்.

Remove ads

சொல்லிலக்கணம்

இசுரேலிய அமைச்சரவை “இசுரேலின் பாதுகாப்பிற்கான இராணுவம்” எனும் எபிரேய அர்த்தமுள்ள “இசுரேலிய பாதுகாப்புப் படைகள்” (எபிரேயம்: צְבָא הַהֲגָנָה לְיִשְׂרָאֵל), Tzva HaHagana LeYisra'el, எனும் பெயரை 26 மே 1948 அன்று சட்டபூர்வமாக உறுதி செய்தது.

அமைப்பு

இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் சகல பிரிவுகளும் ஒரு தனி பிரதம தளபதிக்கு பதில் சொல்ல வேண்டியன. இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் அறிக்கையிப்பார். பாதுகாப்பு அமைச்சரின் சிபார்சுக்கு ஏற்ப அமைச்சரவையினால் இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்படுவார். ஆனால், அரசாங்கம் வாக்கு மூலம் இவருடைய சேவையை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு கூட்ட முடியும்.

கட்டமைப்பு

இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்.

Thumb
பெரிதுபடுத்திப் பார்க்க வரைபடத்தின் மேல் சொடுக்கவும்

பிராந்திய கட்டளைகள்

  • இசுரேலிய வடபகுதி கட்டளை
  • இசுரேலிய மத்திய கட்டளை
  • இசுரேலிய தென்பகுதி கட்டளை
  • இசுரேலிய உள்துறை கட்டளை

படைக்கலம்

இராணுவ தலைமையகம்

  • காலாட்படை மற்றும் வான்குடைப்படை
    • கொலானி பட்டாளம்
    • கிவாடி பட்டாளம்
    • வான்குடைப்படை பட்டாளம்
    • கிபீர் பட்டாளம்
    • நகால் பட்டாளம்
    • பிஸ்லமாச் பட்டாளம்
  • இசுரேலிய கவசப்படை
    • 7வது கவசப்படை பட்டாளம்
    • பராக் கவசப்படை பட்டாளம்
    • 401வது பட்டாளம்
    • 460வது பட்டாளம்


  • இசுரேலிய பொறியியல் படை
  • இசுரேலிய பீரங்கிப் படை
  • இசுரேலிய கள புலனாய்வுப் படை


வான் மற்றும் வான்வெளி படைக்கலம்

  • இசுரேலிய விமானப்படை
  • இசுரேலிய வான் பாதுகாப்பு வலையமைப்பு

கடல் படைக்கலம்

  • இசுரேலிய கடற்படைகள்

ஏனைய பிரிவுகள்

இராணுவம்:

  • இசுரேலிய இராணுவ கல்விக்கூடங்கள்
    • தந்திரோபாய கட்டளை கல்லூரி
    • கட்டனள மற்றும் அலுவலர் கல்லூரி
    • தேசிய பாதுகாப்புக் கல்லூரி
  • பிராந்திய அரச செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர்
  • இராணுவ பரிந்துரை தளபதி
  • இசுரேலிய இராணுவ முறையீட்டு நீதிமன்றம்
  • பிரதான அலுவலருக்கான நிதி ஆலோசனை
  • பிரதமரின் இராணுவ செயலாளர்

பொதுமக்கள்:

  • பாதுகாப்பு அமைச்சருக்கான இயக்குநர்
  • பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர் பிரிவு
  • ஆயுத அபிவிருத்தி நிர்வாகம்

பிரிவுகள்

இசுரேலிய பிரதம தளபதி

  • இசுரேலிய திட்டமிடல் இயக்குநர்
  • இசுரேலிய நடவடிக்கை இயக்குநர்'
    • இசுரேலிய பாதுகாப்புப் படைகள் பேச்சாளர்
  • அமான் புலனாய்வு
    • இசுரேலிய புலனாய்வுப் படைகள்
    • இசுரேலிய இராணுவ தனிக்கை
  • மனிதவள இயக்குநர்
    • இசுரேலிய இராணுவ காவற்படை
    • இசுரேலிய கல்வி மற்றும் இளைஞர் படைகள்
    • இசுரேலிய உதவிப்படைகள்
    • இசுரேலிய பொதுப்படைகள்
    • இராணுவ ராபிக்கள்
    • பெண்கள் விவகார ஆலோசகர்
    • இசுரேலிய பிரதம நெருக்கடிநேர அலுவலர்
  • இசுரேலிய கணினி சேவைகள் இயக்குநர்
    • சி4ஐ படைகள்
  • 'ஏற்பாட்டியல், மருத்துவ மற்றும் மத்திய இயக்குநர்
    • இசுரேலிய பெரும் பீரங்கிப்படைகள்
    • இசுரேலிய ஏற்பாட்டியல் படைகள்
    • இசுரேலிய மருத்துவப் படைகள்
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் அடிக்குறிப்புக்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads