இசுலாமியத் தமிழ் இலக்கியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுலாமிய சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.
தமிழரிடையே இசுலாம்
தமிழ்நாட்டு மதுரையை தில்லி சுல்தான் படைகள் 1311 ஆம் ஆண்டு கைப்பெற்றின.[1] விஜயநகரப் பேரரசு இவர்களை 1371 ஆம் ஆண்டு தோற்கடித்தது.[2] தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும்.[3]
தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து இங்கேயே தங்கினர். இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தைக் கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர். இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.
Remove ads
இலக்கியம்
900
- திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா
1100
1400
- யாகோபுச் சித்தர் பாடல்கள் - கிபி 15 நூற்
1500
- ஆயிரமசலா - 1572
- மிகுராசு மாலை - 1590
1600
- திருநெறி நீதம் - 1613
- சக்கூன் படைப் போர் - 1686
- கனகாபிடோகமாலை - 1648
- சீறாப் புராணம்
1700
- திருமணக் காட்சி
- சின்னசீறா
1800
- குத்பு நாயகம்]
- முகைதீன் புராணம்
- மீதான் மாலை- செய்கு முஸ்தபா
- திருமணிமாலை
- புதுகுஷ்ஷாம்
- தீர் விளக்கம்
- நவமணிமாலை
- திருக்காரணப்புராணம்
- நாகூர்ப் புராணம்
- ஆரிபு நாயகம்
- இரவு கூகூல் படைப்போர்
- சாதுவிநாயகம்
- மூசா நபி
- அசன்பே சரித்திரம்
1900
- பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
- மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
- நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
- அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
- இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
2000
- நாயகம் ஒரு காவியம் - மு. மேத்தா
- தாகிபிரமம் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
காலம் ?
- சேக் பீர்முகம்மது சாகிபு - 20 மேற்பட்ட இசுலாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள்
- மச்சரேகைச் சித்தரின் பேரின்ப சதகம்
- சாம் நைனா லெப்பை ஆலிம் - அதபுமாலை
- ஆலிப்புலவர் - மிகுராசு மாலை
- திருப்பாலைக்குடி செய் தக்காதிப் புலவர் அபூசகுமா மாலை
- அனபியா சாகிபு - நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
- அபீபு முகமது லெப்பை - மக்காக் கலம்பகம்
- கவிக்களஞ்சியப் புலவர் - நபியதவார அம்மானை
- குலாம் காதிறு நாவலர் - குவாலீர் கலம்பகம்
- குலாம் காதிறு நாவலர் - புலவராற்றுப்படை
- செவத்த மரைக்காயார் - திருமக்காக் கோவை
- பெண்புத்திமாலை
- நெஞ்சில் நிறைந்த நபிமணி
- குணங்குடியார் பாடல்கள்
- சீறா கீர்த்தனைகள்
- சைத்தூன் கிஸ்ஸா
- காசிம் படைப் போர்
- இறசூல் மாலை - சாம் சிகாபுத்தீன் வலீ
- நூறு மசாலா
- நசீகத்து நாமா
- இராச மணிமாலை
- சம்ஊன் கிஸ்ஸா
- விறகு வெட்டியார் கிஸ்ஸா
- நான்கு பக்கீர்சா கிஸ்ஸா
- தமீமுல் அன்சாரி கிஸ்ஸா
- பப்பரத்தி மாலை
- தாரு மாலை
- மீரான் மாலை
- வெள்ளாட்டி மசாலா
- முகையத்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம்
- மஸ்தான் சாகிபு பாடல்
- தரீக்குல் ஜன்னா
- அலி பாத்துசா நாடகம்
Remove ads
இசுலாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள்
- கிசா
- முனாசாத்து
- நாமா
- படைப்போர்
- மசாலா
- மாலை
- கண்ணி
- திருமண வாழ்த்து
- நொண்டி நாடகம்
புலவர்கள்
- உமறுப் புலவர்
- சதக்கத்துல்லா அப்பா
- அப்துல் காதர் நயினார் லப்பை
- பிச்சை இபுராகிம் புலவர்
- முகம்மது கான்
- அப்துல் மஜீது
- முகமது உசேன்
- கண்ணகுமது மகதூம் முகம்மது - நூல் பதிப்பாளர், 70 நூல்களுக்கு மேல்
- தக்கலை பீர் முகமது அப்பா
இவற்றையும் பாக்க
- இசுலாமிய தமிழ் இலக்கிய கழகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads