இசுலாம் கரிமோவ்

உஸ்பெகிஸ்தான் தலைவர்களில் ஒருவர் From Wikipedia, the free encyclopedia

இசுலாம் கரிமோவ்
Remove ads

இசுலாம் அப்துகனியெவிச் கரீமவ் (Islam Abduganiyevich Karimov, உசுபேகியம்: Islom Abdugʻaniyevich Karimov, உருசியம்: Ислам Абдуганиевич Каримов; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) உஸ்பெகிஸ்தான் நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.

விரைவான உண்மைகள் இசுலாம் கரீமவ்Islom Karimov Ислам Каримов, உஸ்பெகிஸ்தான் முதல் அதிபர் ...

இவர் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டுவரையிருந்தார்.[2]

பக்கவாதத்தின் விளைவால்[3][4] 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.[5]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads