இசைவாக்கம்

From Wikipedia, the free encyclopedia

இசைவாக்கம்
Remove ads

இசைவாக்கம் (Adaptation) என்பது ஒரு தனி உயிரினத்தில் (organism) அல்லது குறிப்பிட்ட இனத்தில் (species), அல்லது ஒரு இனக்கூட்டத்தில்/சனத்தொகையில்/மக்கள்தொகையில் (population) புதிய வாழிடத்துக்கு ஏற்றவகையில் அமைப்பு, தொழிற்பாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குறிக்கும்.

பொதுவாக உயிரியலில் இந்த இசைவாக்கம் என்பது ஒரு இனக்கூட்டம் தனது வாழிடத்துக்கு ஏற்ற வகையில் பரிணாம வளர்ச்சி செயல்முறையில் விருத்தியடைவதைக் குறிக்கும்[1][2]. இந்த செயல்முறை பல சந்ததிகளூடாக நடைபெறுவதாகவும்[3] உயிரியலில் முக்கியமான ஒரு தோற்றப்படாகவும் இருக்கின்றது[4]. இந்த இசைவாக்கத்தில் விருத்தியடையும் இனமானது இயற்கைத் தேர்வில் வெற்றிபெற்று, குறிப்பிட்ட சூழலில் தம்மை தகுதியுள்ளவையாக நிலைநிறுத்தி, இனப்பெருக்கம் மூலம் பல்கிப் பெருக முடிகின்றது. அதேவேளை ஒரு உயிரினம் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்வதற்காக அதன் சூழலுக்கு ஏற்ற வகையில் அவ்வ்யிரினத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் இந்த இசைவாக்கம் என்ற பதம் குறிப்பிடுகின்றது[5].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads