இஞ்சியோன்

From Wikipedia, the free encyclopedia

இஞ்சியோன்
Remove ads

37°29′N 126°38′E

விரைவான உண்மைகள் இஞ்சியோன் 인천仁川இங்கோன், இன் சுன், கொரியப் பெயர் transcription(s) ...

இஞ்சியோன் பெருநகரம் (Incheon Metropolitan City) கொரியாவின் வடமேற்கில் அமைந்துள்ளது. 1883ஆம் ஆண்டு கெமுல்போ துறைமுகம் கட்டப்பட்டபோது நகரில் 4700 நபர்களே இருந்தனர். இன்று அதுவே 2.76 மில்லியன் மக்கள்தொகை உள்ள பெருநகரமாக வளர்ந்து கொரியாவின் சியோல் மற்றும் புசானை அடுத்து மூன்றாவது பெருநகரமாக விளங்குகிறது. துறைமுக நகராக இருக்கும் வசதியால் கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் இந்த நகரமும் அண்மைக்காலங்களில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இஞ்சியோன் துறைமுகம் 2003ஆம் ஆண்டில் கொரியாவின் முதல் திறந்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல உள்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தப் பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது உயிரியல் தொழில் முனைவிற்கு சாங்டோ பன்னாட்டு நகரை மையமாகக் கொண்டுள்ளது.

ஓர் பன்னாட்டு நகரமாக இங்கு 2009 இஞ்சியோன் உலக சந்தை மற்றும் விழா போன்ற பல பெரும் பன்னாட்டு மாநாடுகளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. பதினேழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு செப்டம்பர் 19, 2014 முதல் நடைபெற உள்ளன. உலகின் பல பகுதிகளையும் வடகிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் மையமாக இஞ்சியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் இஞ்சியோன் துறைமுகம் விளங்குகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads