சியோல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியோல் (ஆங்கிலம்: Seoul, கொரிய மொழி: 서울 சௌல்) தென்கொரிய நாட்டின் தலைநகராகும். உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.10மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.[1] சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)[2] மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று[3] என்பன சியோலில் அமைந்துள்ளது.
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி ஹான் நதியின்அதிசயம் என அறியப்படுகின்றது.கொரியப் போரின் பின்னர்,2012ஆம் ஆண்டில் டோக்கியோ, நியூயார்க், லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும்.[4] உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான சேம்சங் மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.[5] ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் 2012 கணிப்பீட்டின் படி நியூயார்க்,லண்டன் மற்றும் மெல்பேர்ண் நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.
சியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.[6] இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.[7] சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.[8]
சியோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி, மற்றும் 2010 ஜீ-20 சியோல் உச்சிமாநாடு என்பவற்றை நடத்தியது.2010இல் உலகின் வடிவமைப்பு தலைநகராக,யுனெஸ்கோவின் ஒரு வடிவைமப்பு நகரான ஸியோல் தெரிவுசெய்யப்பட்டது.
Remove ads
பெயர்

கடந்த காலங்களில் சியோல் நகரம் வர்யே சொங் (Wirye-seong, 위례성; 慰禮城 : பேக்ஜே சகாப்தம்), ஹான்ஐு (Hanju ,한주; 漢州 : சில்லா சகாப்தம்), நம்கியோங் (Namgyeong 남경; 南京 : கொர்யோ சகாப்தம்), ஹான்சொங் (Hanseong ,한성; 漢城 : பேக்ஜே மற்றும் ஜோஸேன் சகாப்தம்), ஹான்யாங் (Hanyang ,한양; 漢陽 : ஜோஸேன் சகாப்தம்), ஜியோங்சொங் (Gyeongseong,경성; 京城: காலனித்துவ சகாப்தம்)[9] போன்ற பல பெயர்களில் அறியப்பட்டது. சியோல் என்ற தற்போதைய பெயர் கொரிய மொழியில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.
Remove ads
வரலாறு
சியோல் முதலாவது வய்ரி சியோங் என பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது பேக்ஜே இராச்சியத்தின் தலைநகராவதுடன், கி.மு.18 இல் உருவாக்கப்பட்டது. கொர்யோ காலப்பகுதயில், இது ஹன்சொங் (漢城, "ஹான் ஆற்றால் வலுவூட்டப்பட்ட நகரம்") என அழைக்கப்பட்டது. ஜோஸேன் காலப்பகுதியில்,1394 ஆரம்பத்தில் தலைநகராக ஹங்யாங் (漢陽) என அழைக்கப்பட்டது. இது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் ஜியோங்சொங் (京城, ஜப்பானிய மொழி: கெய்ஜோ) என்று அழைக்கப்பட்டது. இறுதியாக1945இல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஸியோல் என அழைக்கப்படுகின்றது. ரஷ்யா-ஜப்பான் யுத்தத்திற்கு (1904-1905) பின்னர் ஜப்பான் பேரரசுடன் கொரிய இணைக்கப்படதுடன், நகரின் பெயர் 'கெய்ஜோ' என மாற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் இறுதயில் நகரம் சுதந்திரம் அடைந்தது.
Remove ads
புவியமைப்பு

சௌல் கொரியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சியோல் சரியாக 605.25 கிமீ2[10] பரப்பளவைக் கொண்டதுடன்,ஏறத்தாள 15 கிலோமீற்றர் (9 மைல்) ஆரையை உடையது. அநேகமாக, ஹான் ஆற்றினால் வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளாக இருகூறாக்கப்பட்டுள்ளது.
காலநிலை
சௌல் ஈரப்பதன் உடைய/துணை வெப்பமண்டல இடைநிலை காலநிலையுடன்,இரு சிறப்பியல்புகளை கொண்டது.பொதுவாக கோடை காலத்தில்ஜுன் முதல் ஜனவரி வரை வெப்ப மற்றும் ஈரப்பதன் கூடிய காலநிலை காணப்படும்.சராசரி வெப்பநிலையாக 22.4 - 29.6 °C (72 - 85 °F) காணப்படும்.
நிர்வாக மாவட்டங்கள்

சௌல் 25 குவ்(தென்கொரியா நிர்வாகப் பிரிவு)ஆக பிரிக்கப்பட்டுள்ளது. குவ்வானது மிகவும் பெரிய பரப்பளவையும்( 10 முதல் 47 கிமீ2), சனத்தொகையையும் (140,000 முதல் 630,000 இலும் குறைவான) உடையது.இதில் சோங்பா அதிக சனத்தொகையுடைய,பெரிய நிலப்பரப்பாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads