இடச்சேரி கோவிந்தன் நாயர்

மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

இடச்சேரி கோவிந்தன் நாயர்
Remove ads

இடச்சேரி கோவிந்தன் நாயர் (Edasseri Govindan Nair) ( மலையாளம்: ഇടശ്ശേരി ഗോവിന്ദൻ നായർ ) (பிறப்பு: 23 டிசம்பர் 1906 - இறப்பு: 16 அக்டோபர் 1974) என்பவர் ஒரு இந்திய கவிஞரும் மலையாள இலக்கியத்தின் நாடக ஆசிரியரும் ஆவார். இடசேரி / எடச்சேரி சாகித்ய அகாதமி விருதையும், கவிதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருதையும் பெற்றவர். மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஆசான் ஸ்மாரக கவிதா புரஸ்காரத்தையும் அவர் பெற்றார்.

விரைவான உண்மைகள் இடச்சேரி கோவிந்தன் நாயர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கையும் தொழிலும்

எனக்கும் ஒரு தாய் இருந்தாள்
ஒரு ராஜா என்னை வாங்கியபோது, நான் ஒரு அடிமை,
அவளுக்கு ஒரு பரிசு வழங்கினார், ஒரு சில நாணயங்கள்
அவள் அதை என்னுடைய அனாதை கயிறுடன் கட்டினாள்
என்னுடைய வெற்று இடது கையில்
பின்னர், நான் ஒரு போர்வை வாங்கினேன்
அவளை குளிரிலிருந்து பாதுகாக்க
அடடா! கடைசியாக நான் பரிசுடன் வந்தபோது
அவள் நித்திய ஓய்வுக்குச் சென்றிருந்தாள்
அடர்த்தியான மண் போர்வையின் மறைவின் கீழ்.

எம். கிங் பிம்பிசரனின் ஷெப்பர்ட்இன் பகுதிகள். மொழிபெயர்ப்பு: லீலாவதி.

இடசேரி கோவிந்தன் நாயர் 1906 டிசம்பர் 23 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள குற்றிப்புரத்தில் பி. கிருஷ்ணா குறுப்பு மற்றும் இடசேரி குஞ்சுகுட்டி அம்மா ஆகியோரின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.[2] 1921 ஆம் ஆண்டில் 15 வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்ததால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. பின்னர் ஆலப்புழாவில் பணிபுரிந்த உறவினரின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், முறையான கல்வியை ஈடுசெய்ய இவர் கடினமான வாசிப்பு, சமசுகிருதம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். தனது நண்பர்களிடமிருந்து உதவியைப் பெற்றார். இலக்கியம், விமர்சனம், அறிவியல், வானியல் மற்றும் சோதிடம் பற்றிய விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். கோழிக்கோடு செல்லுமுன் ஆலப்புழையில் 7 ஆண்டுகள் கழித்தார். 1930 இன் ஆரம்பத்தில், பொன்னாணிக்கு குடிபெயர்ந்தார். இந்த நேரத்தில்தான் 1938 இல் ஜானகி அம்மா என்பவரை மணந்தார். பொன்னாணியில் தனது கற்றல் பணி, வாதங்கள், விவாதங்களையும் தொடர்ந்தார்.[3]

கோவிந்தன் நாயர் பல்வேறு இலக்கிய மன்றங்களுடனும் கலாச்சார மன்றங்களுடனும் தொடர்புடையவர்.[3] கேரள சாகித்ய அகாதமி, கேரள சங்கீத நாடக அகாதமி, சமஸ்த கேரள சாகித்ய பரிசத் ஆகியவற்றின் பொதுக்குழுவில் அமர்ந்த நாயர், சாகித்ய பிரவர்தக சாகரண சங்கத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார். பல்வேறு காலகட்டங்களில் கேரள சாகித்ய சமிதி, கேந்திர கலா சமிதி ஆகியவற்றிக்கு தலைமை தாங்கினார். மேலும் கிருஷ்ண பணிக்கர் வயன சாலா என்ற உள்ளூர் நூலகத்தை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

கோவிந்தன் நாயரின் படைப்புகளில் 19 புத்தகங்கள், 300க்கும் மேற்பட்ட கவிதைகள் 10 தொகுப்புகளில், 6 நாடகங்களின் புத்தகங்கள், கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவை அடங்கும்.[4] மலையாள கவிதைகளின் காதல் பண்புகளை யதார்த்தவாதமாக மாற்றிய கவிஞர்களில் இவரும் ஒருவர். இவரது கதை பாணி, இவரது கவிதைகளான பூதப்பாட்டு, பானிமுதாக்கம், கல்யாண புதாவா, கருத்த செட்டிச்சிகள், காவிலேபாட்டு போன்றவற்றில் காட்டப்பட்டுள்ளபடி, வலுவான மனிதநேயத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Remove ads

சொந்த வாழ்க்கை

கோவிந்தன் நாயர் - ஜானகி அம்மா தம்பதியருக்கு பதினொரு குழந்தைகள் இருந்தனர். இருப்பினும் எட்டு பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தனர். கோவிந்தன் நாயர், 1974 அக்டோபர் 16, அன்று தனது 67 வயதில் இறந்தார்.[3]

விருதுகள்

இடசேரி (மெட்ராஸ் அரசு என்று அழைக்கப்பட்ட) தமிழக அரசிடமிருந்து கூட்டுக்ரிசி என்ற நாடகத்திற்கும் மற்றொன்று, புத்தன் கலவும் அரிவாளும் என்ற கவிதைத் தொகுப்பிற்காகவும் இரண்டு விருதுகளைப் பெற்றார்.[3] ஒரு பிடி நெல்லிக்கா என்ற கவிதைத் தொகுப்பிற்காக 1969 ஆம் ஆண்டில் கவிதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[5] ஒரு வருடம் கழித்து, சாகித்திய அகாதமி 1069 ஆம் ஆண்டிற்கான அவர்களின் வருடாந்திர விருதை காவிலே பாட்டு என்ற படைப்பிற்கு வழங்கியது. இது இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பாகும்.[6][7] அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தித்திரி என்றத் தொகுப்பிற்காக 1979 ஆம் ஆண்டில் கோவிந்தன் நாயருக்கு ஆசான் சமாரக கவிதா புரஸ்காரம் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads